ஏப்ரல் 22, 2021, 7:28 காலை வியாழக்கிழமை
More

  தேதியை அறிவித்தார் தேர்தல் ஆணையர்! தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு!

  தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் தேதிகளை அறிவித்து பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டதாவது…

  sunil arora - 1

  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

  தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வருகிறது.

  தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் தேதிகளை அறிவித்து பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டதாவது…

  கொரோனாவில் இருந்து உலகமே மீண்டு வரும் ஆண்டாக 2021 உள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்த 2020ம் ஆண்டே சட்டப்பேரவை தேர்தலை நடத்தியுள்ளோம்! கொரோனா சூழலில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை உள்ளது !

  கொரோனா சூழலில் அதற்கு ஏற்ற வகையில் தேர்தலுக்கு சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. கொரோனா சூழலிலும் பீகார் தேர்தலில் அதற்கு முந்தையை தேர்தலை விட அதிக வாக்குகள் பதிவாகின !

  தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே தேர்தல் ஏற்பாடுகளை துவங்கி கண்காணித்து வருகிறோம். தேர்தல் ஆணைய சிறப்பு அதிகாரி உமேஷ் சின்ஹா ஜனவரி மாதம் முதல் தமிழக தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகிறார். .. என்று குறிப்பிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் நடத்தை விதிகள் குறித்தும் அறிவித்தார்.

  தமிழக தேர்தல் பார்வையாளராக அலோக் வர்தன் நியமனம் செய்யப் பட்டுள்ளார். தமிழகத் தேர்தல் பாதுகாப்பிற்கான பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமனம்!

  • புதுச்சேரியிலும் ஆறாம் தேதி வாக்குப்பதிவு இரண்டாம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
  • கேரள மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெறும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை
  • தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது
  • தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது
  • கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும்
  • தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.6ல் தேர்தல் நடைபெற உள்ளது
  • மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது – சுனில் அரோரா

  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

  வேட்புமனு தாக்கல் – மார்ச் 12
  மனு மீதான பரிசீலனை – மார்ச் 20
  வாக்குப்பதிவு – ஏப்ரல் 6
  வாக்கு என்ணிக்கை – மே 2

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »