Home கல்வி ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு!

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு!

ஜனவரி- 31 ஆம் தேதி நடந்த மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (Central Teacher Eligibility Test- CTET) முடிவுகளை இன்று (26/02/2021) வெளியிட்டது சி.பி.எஸ்.சி.

இது தொடர்பாக சி.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மத்திய ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளுக்கு 16,11,423 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 12,47,217 பேர் தேர்வை எழுதிய நிலையில், 4,14,798 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

அதேபோல், இரண்டாம் தாளுக்கு 14,47,551 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 11,04,454 பேர் தேர்வு எழுதிய நிலையில், 2,39,501 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

தேர்வர்கள் www.ctet.nic.in , www.cbse.nic.in ஆகிய இணையதளங்களுக்குச் சென்று, தங்களது பதிவு எண்ணை (Roll Number) பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version