ஏப்ரல் 18, 2021, 10:40 காலை ஞாயிற்றுக்கிழமை
More

  17 யூடியூப் சேனல்.. 20 மில்லியன் சப்ஸ்கரைபர்ஸ்.. 300 ஆபாச வீடியோ! கோடி கணக்கில் சம்பாதித்த மூவர் கைது!

  05 May27 youtube e1539757713461
  05 May27 youtube e1539757713461

  யூ டியூபில் ஆபாச படம் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்த மூவரை போலீசார் கைது செய்தனர் .

  மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் வசிக்கும் முகேஷ் குப்தா (29) மற்றும் அவரது கூட்டாளிகளான ஜிதேந்திர குப்தா (25) மற்றும் குமார் சவ் (23) ஆகிய மூவரும் குரார்ஹாட்டில் 17 யூடியூப் சேனல்கள் மற்றும் பேஸ்புக் பக்கங்களை இயக்கி வந்தார்கள்

  அவர்களிடம் 20 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். அவர்கள் 300க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை படமாக்கி வெளியிட்டுள்ளார்கள், இதன் மூலம் சுமார் 2 கோடி ரூபாய் சம்பாதித்தனர்.

  இந்த மூவரும் இளம் பெண்கள் மற்றும் மைனர் சிறுமிகளை அணுகி அவர்களுக்கு பணம் கொடுத்து தங்கள் யூ–டியூப் வீடியோக்களில் நடிக்கச் சொல்வார்கள். மேலும் அவர்கள் பொது இடங்களில் குறும்பு வீடியோக்களைப் படமாக்கும் போலிக்காரணத்தில் பெண்களின் தனிப்பட்ட பகுதிகளைத் தொட்டு, ஆபாசமாக பேசுவார்கள். இந்த வீடியோக்கள் மூலம் ஐந்து இளம்பெண்கள், அந்த மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த மூவரையும் கைது செய்தனர்.

  அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு கூறியதாவது “ஆபாசமான வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்க்கிறது என்று அவர்கள் பிராங்க் வீடியோக்களின் போலிக்காரணத்தின் கீழ், ஆபாச வீடியோக்களை படம்பிடிக்கிறார்கள். அதற்காக அவர்கள் பெண்களை ஏமாற்றி பணம் சம்பாதித்தனர் “என்றார்கள்

  அவர்கள் மீது மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மேலும் அவர்களிடமிருந்து ஐந்து மடிக்கணினிகள், நான்கு மொபைல் போன்கள் மற்றும் ஒரு கேமரா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தார்கள் .

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,229FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,110FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »