Home இந்தியா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர்!

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 24 மணி நேரத்தில் புதிதாக 16,752 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,10,96,731 ஆக அதிகரித்துள்ள நிலையில் ஒரேநாளில் இறப்பு எண்ணிக்கையும் 113 ஆக இருந்தது.

இதனால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 1,57,051 ஆக அதிகரித்துள்ளது. ,கடந்த பல நாட்களாக கொரோனா பரவல் குறைந்த்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக தமிழகம், கேரளா கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் உயர்ந்துள்ளது.

மார்ச் 1 ஆம் தேதி இரண்டாம் கட்ட தடுப்பூசி ஆரம்பமாகும் என அறிவித்திருந்த நிலையில் இன்று 60 வயது மேற்பட்டவர்களுக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட நோயுள்ள 45 வயது மேற்பட்டவர்களுக்கும் போடப்படயுள்ளது.

இந்நிலையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

சாதாரண குடிமக்களைப் போன்று 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்ற விதியின்படியும் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகவும் பிரதமர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

அத்துடன் அவர் தகுதியான அனைவரும் கொரோனா ஊசி எடுத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version