ஏப்ரல் 14, 2021, 1:53 காலை புதன்கிழமை
More

  தண்ணீர் இன்றி வாடிய கிராமம்! உடனடி தீர்வு செய்த சோனு சூட்!

  Sonu sood 1 - 1

  தன்னலம் கருதாது, ஏழை, எளிய, மக்களுக்காக சொத்துக்களை அடமானம் வைத்து பல உதவிகளை, செய்து வந்த சோனு சூட், தற்போது பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாத விஷத்திற்கு அதிரடியாக தீர்வை கொண்டுவந்துள்ளார். இதனால் நடிகர் சோனு சூட்டிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  அனுஷ்காவின் அருந்ததி, சிம்புவுடன் ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லன் நடிகராக வலம் வந்த சோனு சூட், திரையில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார்.

  sonu-sood
  sonu-sood

  கொரோனா லாக்டவுன் காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தது முதல் நம்ம ஊர் மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்திக் கொடுத்தது வரை கணக்கில்லாத உதவிகளை செய்தார்.

  அதன் பிறகு தனது சோசியல் மீடியா பக்கங்களில் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

  அதுமட்டுமின்றி அடுத்தடுத்து உதவி கேட்போருக்கு கொடுப்பதற்காக தனது பெயரிலும், மனைவி சோனாலி பெயரிலும் உள்ள 2 கடைகள் 6 குடியிருப்புகள் என மொத்தம் 8 சொத்துக்களை 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார்.

  village - 2

  இப்படி மக்கள் சேவையில் தீவிரமாக இறங்கியுள்ளதால் சோனு சூட்டிற்கு, தற்போது திரையிலும் நல்ல காலம் ஆரம்பித்துள்ளது. அதாவது ஹீரோவாக நடிக்க பல படங்களில் வாய்ப்பு குவிந்து வருவதாக கூறப்படுகிறது. தன்னலம் கருதாது எளிய மக்களுக்காக சொத்துக்களை அடமானம் வைத்து கூட உதவ வேண்டும் என முடிவெடுத்துள்ள சோனு சூட்டை அவரது ரசிகர்கள் கோவில் கூட கட்டி விட்டனர். இந்நிலையில் பல வருடங்களாக, தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைக்கு விடிவு காலத்தை கொண்டு வந்துள்ளார்.

  ஜான்சி என்ற கிராமத்தில் வசித்து வரும் ஒருவர், சோனுசூட்டை அணுகி, தங்களுடைய கிராமத்திற்கு தண்ணீர் வசதி இல்லை என்றும் பல கிலோமீட்டர்கள் சென்றுதான் தண்ணீர் எடுத்து வருவதாகவும் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.

  water - 3

  இந்த தகவல் தெரிய வந்ததும், உடனடியாக அந்த கிராமத்திற்கு ஒரு போர்வெல் அமைத்து, தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடிவெடுத்து. அதற்கான பணியிலும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் அந்த கிராமத்தில் போர்வெல் போடப்பட்டு தற்போது அங்கு தண்ணீர் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

  பல வருடங்களாக தண்ணீர் பிரச்சனைக்காக போராடி அலுத்து போன, மக்கள் தற்போது தண்ணீர் பிரச்சனை சோனு சூட் மூலம் முடிவுக்கு வந்துள்ளதால் உணர்வு பூர்வமாக அவருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  1 × 1 =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »