Home உலகம் இத்தாலியில் 2000 ஆண்டுகள் பழமையான தேர்!

இத்தாலியில் 2000 ஆண்டுகள் பழமையான தேர்!

2000 வருடங்கள் பழமை வாய்ந்த தேர் ஒன்று இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தாலியின் தென்பகுதியில் அமைந்துள்ள தொன்மையான நகரம் பாம்பேய் (Pompeii). இந்த நகரத்தை எரிமலை சீற்றம் கடந்த கிபி 79 ஆம் வருடத்தில் அளித்ததாக கூறப்படும் நிலையில், எரிமலையின் அடர்த்தியான சாம்பலால் பாம்பேய் நகரம் முழுவதும் அழிந்துபோனதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகிறது.

இந்த நகரத்தில் வாழ்ந்த மனிதர்களின் எச்சங்கள் மற்றும் கட்டடங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், இங்கு வாழ்ந்தவர்கள் நாகரிகம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறை தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

பாம்பேய் நகரில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரம் மற்றும் பிற விஷயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வரும் நிலையில், தற்போது நான்கு சக்கரங்களுடன் காணப்படும் தேர் பழங்காலத்தில் குதிரைகள் கட்டிப்போட பயன்படுத்திய இடத்திற்கு அருகில் கண்டறியப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version