ஏப்ரல் 22, 2021, 2:39 காலை வியாழக்கிழமை
More

  இப்படி செய்தால் ஆந்திராவில் கோவில்கள் மீதான தாக்குதல் குறையும்! சின்ன ஜீயர் சுவாமி யோசனை!

  மக்களில் மன தைரியம் ஏற்பட்டால்தான் நோய்களிடமிருந்து நிவாரணம் மக்களிடம் அதிகரித்து கொரோனா போன்ற நோய்கள்

  tirupathi chinna jeeyar - 1

  இப்படிச் செய்தால் ஆந்திராவில் கோவில்கள் மீது தாக்குதல் குறையும் என்று கூறியிருக்கிறார் த்ரிதண்டி சின்ன ஜீயர் சுவாமி!

  வெள்ளிக்கிழமை காலை திருமலையை தரிசித்துக் கொண்ட சின்ன ஜீயர் சுவாமி ஆந்திர பிரதேசத்தில் கோவில்களில் நடக்கின்ற தாக்குதல்களுக்கு தொடர்பாக பல முக்கியமான விஷயங்கள் குறித்து பேசினார்.

  ஆந்திராவில் ஆலயங்களின் மீது தாக்குதல்களை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சருக்கும் திதிதே சேர்மனுக்கும் சில குறிப்புகளை தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

  த்ரிதண்டி சின்னஜீயர் சுவாமிஜி வெள்ளிக்கிழமை ஸ்ரீவாரி தரிசனம் செய்து கொண்டார். ஸ்ரீவாரி அபிஷேக சேவையில் பங்கு கொண்டு வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்ட பின் அவர் மீடியாவோடு உரையாடுகையில் பல முக்கியமான விமர்சனங்களை செய்தார்.

  thirupathi chinnajeeyar - 2

  கோவில்கள் நம் நாட்டிற்கும் நம் தர்மத்திற்கும் மூல நிலையங்கள் என்றும் கோவில்கள் மீது ஆதாரப்பட்டு அனைத்து கலைகளையும் வளர்கின்றன என்றும் குறிப்பிட்டார். திருமலா திருப்பதி தேவஸ்தானம் மீது ஆதாரப்பட்டு சில லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட முக்கியத்துவம் உள்ள கோவில்கள் மீது தாக்குதல்கள் நடப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம்.

  ஆந்திராவில் இந்த தாக்குதல்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன என்று வருத்தம் தெரிவித்தார். சின்ன ஜீயர் சுவாமி ராமதீர்த்தர் அதிலுள்ள ஸ்ரீராமர் விக்ரகத்தின் மீது தாக்குதல் நடந்தது தன்னை அதிர்ச்சி அடையச் செய்தது என்றார்.

  திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் சுப்பாரெட்டி, அறநிலையத்துறை அமைச்சர் வெல்லம்பல்லி ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு கோவில்களின் பாதுகாப்பு அமைப்பின் மீது சில குறிப்புகள் கூறியுள்ளதாகவும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தந்தால் போக்குவரத்து அதிகமாகி முரடர்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடியும் என்று அவர்களுக்கு விவரித்ததாக கூறினார்.

  ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலேயே அதிகமாக கோயில்கள் மீது தாக்குதல் நடப்பதாக தெரிவித்த அவர் இந்தப் பின்னணியில் தாக்குதலுக்குள்ளான 27 கோவில்களை சென்று தான் பார்வையிட்டதாகத் தெரிவித்தார்.

  அவற்றுள்17 ஆலயங்கள் மீது அதிகமாக சிரத்தை காட்ட வேண்டிய தேவை இருப்பதாகவும் அந்த ஆலயங்கள் குறித்த விவரங்களை திதிதே சேர்மனுக்கு அளித்தோம் என்றும் அதற்கு ஒய்வி சுப்பாரெட்டி ஆலயங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக தெரிவித்ததாகவும் கூறினார்.

  ராயலசீமாவில் அற்புதமான ஆலயக் கலைச் செல்வங்கள் இருப்பதாகவும் எட்டிலிருந்து 12வது நூற்றாண்டு வரை கட்டப்பட்ட அபூர்வமான சிற்ப கலைகள் கொண்ட ஆலயங்கள் மிக அதிகளவில் ராயலசீமா பகுதியில் இருப்பதாகவும் விவரித்தார். அப்போதைய சிற்பக்கலை செல்வம் தற்போதைய டெக்னாலஜியால் கூட சாத்தியமாகாதது ஆச்சரியம் என்றார்.

  கண்ணைப் பறிக்கும் சிற்பக்கலைகள் உள்ள புஷ்பகிரி சென்னகேசவ ஆலயம் கூட ஆதரவற்று இருக்கிறதென்றும் ஆலயங்கள் நன்றாக இருந்தால் தான் மக்களின் நேர்மை வளரும் என்றும் தெரிவித்தார். அரசாங்க ஆட்சியில் மக்கள் தர்மத்தோடு வாழ்வதற்கு ஆலயத்தை காப்பாற்றுவது மிகவும் தேவை என்றார். ராயலசீமா பயணத்தில் சில முஸ்லிம், கிறிஸ்தவ சகோதரர்களை தாம் சந்தித்ததாகவும் ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைந்து இருப்பதாக அவர்கள் கூறியது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது என்றும் தெரிவித்தார்.

  எங்கள் இடையில் தகராறு ஏற்படுத்துவதற்காக கோவிகளின் மீது தாக்குதல்கள் அளிக்கிறார்கள் என்று அவர்கள் வருத்தம் தெரிவித்ததாக கூறினார். கோவில்கள் மசூதிகள் சர்ச்சுகள் அனைத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மதத்தினருக்கும் இருக்கிறதென்றும் வசதியற்ற ஆலயங்களுக்கு டிடிடி ஆதரவளிக்கும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் கோரினார்.

  மக்களில் மன தைரியம் ஏற்பட்டால்தான் நோய்களிடமிருந்து நிவாரணம் மக்களிடம் அதிகரித்து கொரோனா போன்ற நோய்கள் அவர்களை அண்டாது என்றும் அவர் கூறினார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »