Home உள்ளூர் செய்திகள் தனித்து நடக்கும் பெண்கள்.. பைக்கில் தொடர்ந்து பாலியல் சீண்டல்! இளைஞன் கைது!

தனித்து நடக்கும் பெண்கள்.. பைக்கில் தொடர்ந்து பாலியல் சீண்டல்! இளைஞன் கைது!

சென்னை சாஸ்திரி நகர் பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறர். இவர் தினமும் வேலை முடித்துவிட்டு, வீட்டிற்கு நடந்து செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று வீட்டுக்கு செல்லும்போது, திடீரென பைக்கில் வந்த இளைஞர் பெண்ணின் அருகில் வந்து பைக்கை நிறுத்தி உள்ளார். பிறகு பாலியல் சீண்டலில் நடுரோட்டிலேயே ஈடுபட்டுள்ளார்.

அந்த பெண் உடனடியாக சாஸ்திரி நகர் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார் போலீசாரும் அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். பெண் சொன்ன அடையாளங்களை வைத்து, தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால், யாரும் அப்படி சிக்கவில்லை. அதனால், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆராய்ந்தனர். அதை வைத்து, அந்த இளைஞரின் பைக் நம்பரை எடுத்து டிரேஸ் செய்தனர்.

இறுதியில், வீட்டு அட்ரஸையும் கண்டுபிடித்துவிட்டனர். பூந்தமல்லி அக்ரஹாரம் தெருவை சேர்ந்த சரண் என்ற இளைஞர்தான் சம்பந்தப்பட்ட நபர் என்பது தெரியவந்தது. 21 வயது ஆனால், பாலியல் விவகாரங்களில் படுமோசமாக நடந்து வந்துள்ளார். ஒரு பைனான்ஸ் கம்பெனில் பில் கலெக்ஷ்ன் வேலை பார்க்கிறார். பணம் வசூல் செய்ய ஆங்காங்கே செல்லும்போதெல்லாம், தன் சபலத்தை நிறைவேற்றி கொண்டுள்ளார்.

யாராவது அழகான பெண்கள், கண்ணில் பட்டால் அவ்வளவுதான். பின்னாடியே பைக்கில் விரட்டி சென்று, அத்துமீறிவிடுவாராம். இளம்பெண்கள், சிறுமிகள் என யாரையுமே விட்டுவைப்பதில்லை. அதிலும், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில்தான், இளம்பெண்களுக்கு குறி வைப்பாராம். பல வருடங்களாக இந்த பழக்கம் இருந்தாலும், கடந்த 2 வருடங்களில் இது அதிகமாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள், இதை வெளியில் சொல்ல பயந்து கொண்டு இருந்துள்ளனர்.

இப்போது இந்த இளைஞரை கைது செய்து உள்ளனர். இதுவரை மொத்தம் 500 பெண்களிடம் தன் சபலத்தை கொட்டி உள்ளார் இந்த இளைஞர். ஒருநாளைக்கு 2 லிருந்து 5 பெண்கள் வரை செக்ஸ் டார்ச்சர் தந்துவிடுவாராம். இதை அவரே போலீசாரிடம் வாக்குமூலமாக கூறி உள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் துணிந்து வந்து புகார் தர வேண்டும், அவர்கள் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version