Home அடடே... அப்படியா? மெடிக்கல் மிராக்கிள்: பிரேத பரிசோதனை செய்த டாக்டரை அதிர வைத்த உயிர் நாடி!

மெடிக்கல் மிராக்கிள்: பிரேத பரிசோதனை செய்த டாக்டரை அதிர வைத்த உயிர் நாடி!

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி கர்நாடக மாநிலம் மஹலிங்கப்பூரில் சங்கர் கோபி என்ற நபர் விபத்தில் சிக்கினார். அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

நேற்று முன் தினம், அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கிற்கு தயாராகி கொண்டிருந்தபோது, ​​அந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாகல்கோட்டிலுள்ள மஹலிங்கப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

பிரேத பரிசோதனைக்கு நியமிக்கப்பட்ட மருத்துவர் எஸ்.எஸ்.கல்கலி, அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, ​​இறந்தவரின் கைகளில் புல்லரிப்பு மற்றும் அசைவுகளை மருத்துவர் கவனித்துள்ளார். மேலும் அவருக்கு இதயத்துடிப்பு இருந்தததையும் மருத்துவர் கவனித்தார்.

இதைத் தொடர்ந்து, கல்காலி கோம்பியை வென்டிலேட்டரிலிருந்து அகற்றிவிட்டு சிறிது நேரம் காத்திருந்தார். கோம்பி கைகளை நகர்த்தியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து, மருத்துவர் இறந்தவரின் குடும்பத்தினரை அழைத்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார்.

இதுகுறித்து பேசிய மருத்துவர் “எனது 18 வருட மருத்துவர் வாழ்க்கையில் 400 க்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகளை நான் செய்திருக்கிறேன், ஆனால் இதுபோன்ற ஒரு வழக்கை நான் பார்த்ததில்லை” என்று கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version