spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்பாஜகவில் இணைந்த திமுக பிரமுகர்!

பாஜகவில் இணைந்த திமுக பிரமுகர்!

- Advertisement -
selvam 1

திமுகவில் இருந்து விலகிய ஆயிரம் விளக்கும் தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்.

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க.செல்வம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக மீது அதிருப்தி இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

திமுகவை குறை கூறுவது, தில்லி சென்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திப்பது என பரபரப்புடன் இருந்தார்.

மேலும் கமலாலயத்தில் ராமர் படத்திற்கு மரியாதை செலுத்தி திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்தார் இவர். தில்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்த பிறகு பேசிய இவர், எம்எல்ஏ பதவியில் இருந்து விலக போவதில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதை தொடர்ந்து பாஜகவில் இணையாமல் , அக்கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, கரு.நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்.

தேர்தல் நெருங்குவதால் கட்சிகள் அனைத்தும் மாற்று கட்சியில் உள்ள முக்கிய நபர்களை தங்கள் வசம் இழுக்க முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் பாஜகவில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வம் இணைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe