ஏப்ரல் 14, 2021, 1:15 காலை புதன்கிழமை
More

  அந்தரங்க வீடியோவை காட்டி பணம் பறிப்பு! ஹோட்டல் மேனஜர் கைது!

  08 June01 Capual hotel
  hotel

  மகாராஷ்டிராவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய ஹோட்டல் மேனேஜரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  மகாராஷ்டிரா மாநிலம் நாகூரைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் அங்கு செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் பணி புரிவதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். அந்த ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றி வந்த பங்கஜ் பாட்டில் என்பவர் அப்பெண்ணை நேர்காணல் செய்துள்ளார். அப்போது அப்பெண்ணை பற்றிய அனைத்து தகவல்களையும் பங்கஜ் கேட்டு தெரிந்து கொண்டார்.

  அதன் பின் அந்த பெண்ணுடன் பங்கஜ் நெருங்கி பழகியுள்ளார்.சில நாட்களில் உங்களை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி ஆசை வார்த்தைகளால் பேசியுள்ளார்.

  மேனேஜர் பங்கஜிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பது தெரிந்தும் அந்த பெண் அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளார். அதன் பிறகு இவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

  அப்போது பங்கஜ் இவர்கள் உல்லாசமாக இருந்த வீடியோவை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் எடுத்துள்ளார். இப்படியே அவர்களது வாழ்க்கை உல்லாசமாக சென்று கொண்டிருந்தது. சில நாட்களுக்குப் பிறகு பங்கஜ் தானும் இதேபோன்று தனியாக ஹோட்டல் வைக்க நினைக்கிறேன் என்று கூறி அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டுள்ளார். அவரும் தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே கேட்கிறார் என்று 11 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

  இப்படி அடிக்கடி அந்தப் பெண்ணிடம் பங்கஜ் பணம் கேட்டுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் பணம் இல்லாது போனதால் அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

  அதன் பின் பங்கஜ் தாங்கள் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணும் கிட்டத்தட்ட 33 லட்சம் ரூபாய் பணமும் தன்னிடம் இருந்த அனைத்து நகைகளையும் கொடுத்துள்ளார்.

  அதன்பின் அந்த பெண்ணிடம் இனிமேல் வாங்குவதற்கு எதுவுமில்லை என தெரிந்து கொண்ட பங்கஜ் அவரிடம் இருந்து விலகத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தன்னை ஏமாற்றிய மேனேஜர் பங்கஜ் பாட்டில் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் பெண்ணை ஆபாசமாக வீடியோவை எடுத்து மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக பங்கஜை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  eighteen − seven =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »