Home அடடே... அப்படியா? ஈஷா மஹாசிவராத்திரி… இந்த ஆண்டு ஆன்லைன் வழியேதான்!

ஈஷா மஹாசிவராத்திரி… இந்த ஆண்டு ஆன்லைன் வழியேதான்!

isha sivrathri

ஈஷா மஹாசிவராத்திரி – இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக கலந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளது ஈஷா யோக மையம். மேலும், மார்ச் 8 முதல் 11 வரை ஆதியோகி, தியானலிங்கம் தரிசனத்துக்கு இன்றி மூடப் படும் என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு தெரிவித்துள்ள தகவல்…

ஈஷாவில் மிக பிரமாண்டமாக நடக்கும் மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி, அதிகப்படியான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, முன்பதிவு செய்த மிக குறைவான எண்ணிக்கை யிலான மக்கள் மட்டுமே இந்தாண்டு விழாவில் நேரில் பங்கேற்க முடியும். மேலும், அவர்கள் கோவிட் பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கி உள்ளோம்.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காகவும், பங்கேற்பாளர்கள் ஆழ்ந்த தியான அனுபவத்தை பெறுவதற்காகவும் நேரில் பங்கேற்பவர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் அனைவரும் தொலைகாட்சி மற்றும் சமூக
வலைத்தளங்களில் மூலம் இலவசமாக கலந்துகொள்ளலாம்.

மஹாசிவராத்திரி விழாவையொட்டி, ஆதியோகி மற்றும் தியானலிங்கம் மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 11-ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும். ஆகவே, பொதுமக்கள் அந்த
நாட்களில் ஈஷாவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மார்ச் 12-ம் தேதி காலை 10.30 மணி முதல் ஆதியோகிக்கு பொதுமக்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள்… என்று தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version