ஏப்ரல் 12, 2021, 6:19 மணி திங்கட்கிழமை
More

  இதையெல்லாம் நிறுத்த சொல்லுங்க.. எழுதி கொடுத்த பிழையின்றி வாசிப்பீங்களா? ஸ்டாலினை வாரிய கமல்ஹாசன்!

  kamal-madurai-int
  kamal-madurai-int

  சென்னை கொளத்தூர் தொகுதியில் நேற்று இரவு பிரச்சாரம் செய்தார் கமல்ஹாசன். இது திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதி என்பதால் கமல்ஹாசன் பிரச்சாரத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

  அதேபோல, ஸ்டாலினை விமர்சனம் செய்ய தவறவில்லை கமல்ஹாசன். ஊழலுக்கு ஒத்து ஊதுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

  கமல்ஹாசன் பேசியதாவது: ஸ்டாலின் சொல்கிறார்.

  நான் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு விஷயம் சொன்னால், முதல்வர் அதை செய்து விடுகிறார் என்று. “அற்புதம்.. ஜனநாயகம் வாழ்கிறது என்பதற்கான பேராதாரம் கிடைத்து விட்டது..” அப்படியானால், அத்தோடு நான் ஒரு நோட்டு கொடுக்கிறேன். அதை “பிழையாக படித்து விடாதீர்கள்.. கரெக்டா படிங்க.”

  நீங்கள் சொல்ல வேண்டியது என்ன என்பதையும் நானே எழுதி கொடுத்து விடுகிறேன். ஊழலுக்கு இடம் கொடுக்காத வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர சொல்லுங்க பார்ப்போம். இருக்குற டாஸ்மாக் கடைகளில் பாதியையாவது மூட சொல்லுங்கள் பார்ப்போம்.

  stalin-history
  stalin-history

  ஆற்றுமணல் திருடுவதை நிறுத்தச் சொல்லுங்கள் பார்ப்போம். தசாவதாரம் திரைப்படத்தில் ஆற்றுமணல் கொள்ளை பற்றி காட்சி வைத்து இருப்போம். அதை எடுப்பதற்கு சற்று தாமதம் ஆனது. அப்போது இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பாராட்டு சொன்னார்கள். பிறகு அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மணல் கொள்ளை பற்றி ஏன் படம் எடுத்தீர்கள் என்று என்னிடமே கேட்டார்கள். ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு இடையூறு என நினைக்கிறார்கள்.

  கல்குவாரி மலைகளை மொட்டை அடிப்பதை நிறுத்த சொல்லுங்கள் ஸ்டாலின் அவர்களே.. இ-டெண்டரில் கள்ளத்தனம் செய்து மாமன், மச்சான் எல்லோருக்கும் ஒப்பந்தம் கொடுக்கிறார்களே, அதை நிறுத்தச் சொல்லுங்கள் பார்ப்போம். சொல்ல மாட்டீர்கள்.. அடுத்து நம்ம ஆட்சி வந்துவிட்டால் என்னாவது என சொல்ல மாட்டீர்கள். இதை தடுத்து நிறுத்தி விட்டால் அடுத்து நமது ஆட்சி வரும்போது அதை செய்ய முடியாது என்று நினைப்பீர்கள். இதுதானே உங்களுக்குள்ள உள்ள அண்டர்ஸ்டாண்டிங். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  two × 3 =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »