Home அடடே... அப்படியா? அதிக நன்கொடை அளித்த மாநிலம்: தமிழகம் முதலிடம்!

அதிக நன்கொடை அளித்த மாநிலம்: தமிழகம் முதலிடம்!

நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. இந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பை அளித்த பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5’ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைநடைபெற்று, பிரதமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையயடுத்து, ராமர் கோவில் கட்டுமானம் முழுக்க முழுக்க மக்களின் நன்கொடைகள் மூலம் மட்டுமே இருக்க வேண்டும் எனத் திட்டமிட்ட ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, நன்கொடை திரட்டும் பணியை கடந்த மாதம் 15’ஆம் தேதி தொடங்கியது. அதே சமயம் கட்டுமானப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகின்றன.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதும் அனைத்து மதத்தினரும் நன்கொடைகளை வாரி வழங்கி வருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் நன்கொடை பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுவரை வசூலிக்கப்பட்ட தொகை ரூ 2,500 கோடியைத் தாண்டியுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கடந்த 45 நாட்களில் நடந்த இந்த நிதி வசூல் போதுமான அளவு இருப்பதால் நன்கொடை வசூல் இயக்கம் நிறைவடைந்ததாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

அதேசமயம் இனிமேல் நன்கொடை அனுப்ப விரும்புவர்கள் தீர்த்த ஷேத்திர அறக்கட்டகளையின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, அதிக நன்கொடை அளித்த மாநிலங்களின் பட்டியலை தொகையுடன் வெளியிட்டுள்ளது.

என்னதான் பெரியார் மண் என இங்குள்ள அரசியல் அமைப்புகள் மார்தட்டிக் கொண்டாலும், ஒவ்வொரு முறையும் ஆன்மீக பூமி தான் என்பதை உறுதி செய்த தமிழகம், இந்த முறையும் அதை நிரூபித்துள்ளது.

ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் வழங்கப்பட்ட நன்கொடைகளில் மிக அதிக அளவாக தமிழகம் 850 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது.

இதற்கு அடுத்த படியாக கேரளா 130 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக தென்னிந்திய மாநிலங்கள் அதிக அளவில் நன்கொடை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும் இது தோராய மதிப்பீடு தான் எனக் கூறியுள்ள ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் முழுமையான தணிக்கைகள் முடிந்த பிறகு, முழு தகவல்களும் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version