
கர்நாடக மாநிலத்தில் உள்ள ரைஸுர் லின்சுகூர் பகுதியை சார்ந்த இளைஞர் பவன் (24). இவன் பெங்களூரில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறான். இவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகே, பெண்கள் பேயிங் கெஸ்டாக தங்க விடுதி உள்ளது.
பல நேரங்களில் விடுதியில் பெண்கள் உபயோகம் செய்யும் கழிவறைக்கு அருகே நிர்வாணமாக நிற்பதை வழக்கமாக வைத்துள்ளான். இதனால் பெண்கள் தனியாக கழிவறைக்கு வர அச்சப்பட்ட சூழலும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு நேரத்தில் பெண்ணொருவர் கழிவறைக்கு சென்ற நிலையில், ஜன்னலோரமாக அந்த இளைஞன் உடையின்றி நிர்வாணமாக இருந்துள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக தனது தாயாருக்கு விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து பெண்ணின் தாய் விடுதிக்கு வந்து விஷயத்தை கேட்டறிந்து, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.