ஏப்ரல் 14, 2021, 1:08 காலை புதன்கிழமை
More

    தங்கமலை: சாக்கு பைகளுடன் ஓடிய மக்கள்!

    gold - 1

    ஆப்பிரிக்காவின் காங்கோவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    அங்கு ஒரு இடத்தில், தங்கத்தால் நிரம்பிய மலை இருப்பதாக செய்தி பரவியது. இந்த தகவல் கிடைத்த உடனேயே மக்கள் அவசர அவசரமாக அங்கு கூடினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    மத்திய ஆபிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசில் ஒரு மலை கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த மலையில், 60 முதல் 90 சதவீதம் பரப்பளவில் தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அருகிலுள்ள கிராமவாசிகள் இந்த தங்க மலையைப் பற்றி அறிந்தவுடன், அவர்கள் அதிக எண்ணிக்கையில் அங்கு செல்லத் தொடங்கினர்.

    தங்கத்தை நிரப்பிக்கொள்ள தங்களுடன் பெரிய பைகளையும் மக்கள் எடுத்துச் சென்றனர். 28 விநாடிகள் கொண்ட வீடியோவை இதுவரை 53 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

    தங்க மலையில் சுரங்கப் பணிகள் நடந்து வருவதை கிராம மக்கள் அறிந்தவுடன், அவர்களும் தங்கத்தை எடுத்துக்கொள்ள அங்கு சென்றனர்.

    இந்த சம்பவத்தின் வீடியோவை பத்திரிகையாளர் அகமது அல்கோபரி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் வீடியோவை பகிர்ந்த உடனேயே அது வைரலாகியது. வீடியோவின் தலைப்பில், அவர், “காங்கோவில் வசிக்கும் மக்கள் தங்கம் நிறைந்த மலையைப் பற்றி அறிந்ததும் அதிர்ச்சியடைந்தனர், ஆச்சரியமடைந்தனர்” என்று எழுதினார்.

    காங்கோவின் பல பகுதிகளில் தங்கம் அதிக அளவில் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், தங்கத்திற்காக மேற்கொள்ளப்படும் சுரங்கப்பணிகள் அங்கு பொதுவானவைதான். இருப்பினும், இந்த குறிப்பிட்ட தங்க மலையைப் பற்றி கேள்விப்பட்டவுடன் ஏராளமான கிராம மக்கள் அங்கு சென்றதால், சுரங்கப் பணிகளை சிறிது நேரம் நிறுத்த வேண்டியிருந்தது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    twelve + 1 =

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    வெள்ளித்திரைClick
    சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,222FansLike
    0FollowersFollow
    18FollowersFollow
    74FollowersFollow
    1,107FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-
    Translate »