Home அடடே... அப்படியா? கிளிக் செய்யாதீங்க! வாட்ஸ்அப் மெசேஜ் குறித்த எச்சரிக்கை!

கிளிக் செய்யாதீங்க! வாட்ஸ்அப் மெசேஜ் குறித்த எச்சரிக்கை!

whatsapp
whatsapp

இந்த நவீன காலக்கட்டத்தில் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தாதவர்கள், மிக மிக குறைவு. எனினும் வாட்ஸ் அப்-ல் மோசடி சம்பவங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன.

வாட்ஸ் அப்-ல் அனுப்பப்படும் போலி செய்திகள் மூலம், மோசடி செய்பவர்கள் பயனர்களை சிக்க வைத்து அவர்களின் தகவல்களை சேகரித்து அவர்களிடம் இருந்து பணம் பறிக்கின்றனர்.

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வாட்ஸ்அப்பில் ஒரு மோசடி செய்தி வாட்ஸ் அப்-ல் வைரலாகி வருகிறது.

whatsapp spy

இந்த செய்தியின் படி, மகளிர் தினத்தை முன்னிட்டு, காலணிகள் தயாரிக்கும் நிறுவனம் அடிடாஸ் இலவசமாக காலணிகளை வழங்குகிறது என்பது அந்த செய்தி.

இந்த செய்தியில் அடிடாஸுடன் தொடர்புடைய செய்தியுடன் ஒரு இணைப்பு வாட்ஸ்அப்பில் அனுப்பப்படுகிறது. இணைப்பைக் கிளிக் செய்தவுடன் மூன்றாம் தரப்பு பக்கம் திறக்கப்படும். மகளிர் தினத்தை முன்னிட்டு, அடிடாஸ் 1 மில்லியம்பேர் காலணிகளைக் கொடுக்கிறது என்று அந்தப் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் கவனமாகப் பார்த்தால், URL இல் எழுதப்பட்ட அடிடாஸின் எழுத்துப்பிழை தவறாக உள்ளது.

ஆனாள் பெண்கள் தினத்தை முன்னிட்டு அடிடாஸ் எந்த இலவச சலுகையும் அறிவிக்கவில்லை. அத்தகைய சலுகை இருந்தாலும், எந்த நிறுவனமும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதை அறிவிக்கும்.

நீங்கள் ஏதேனும் சலுகையின் செய்தியைப் பெற்றால், அதை டெலிட் செய்துவிடுங்கள். இந்த லிங்கை கிளிக் செய்தால், பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம். எனவே இதுபோன்ற செய்திகளில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version