ஏப்ரல் 14, 2021, 2:08 காலை புதன்கிழமை
More

  ஊரெல்லாம் போஸ்டர் அடித்து கணவனின் துரோகத்திற்கு பழி!

  Poster 1 - 1

  பலரும் தங்கள் துணையிடம் இருந்து சில விஷயங்களை மறைப்பதன் மூலம் உறவில் விரிசல் ஏற்பட காரணமாக அமைக்கின்றனர். அந்த துரோகத்தை சிலர் நேரடியாகவோ, குறுஞ்செய்தி மூலமோ கேட்கின்றனர். அல்லது வெறுமனே உறவை முறித்து கொண்டு தங்கள் வழிகளை பார்த்து செல்வர். சிலர் தங்கள் அரக்க குணத்தை வெளிப்படுத்துவர். இது ஒவ்வொருவரின் குணத்தை பொருத்தது. துரோகத்தின் எதிர்வினையை பெரும்பாலும் கணிக்க முடியாது.

  ஆனால் ஒரு வினோத சம்பவமாக
  இங்கிலாந்தில் உள்ள ஓல்ட்ஹாமில் ஒரு பெண் தன் கணவர் செய்த துரோகத்தை குறித்து சில போஸ்டர்களை ஓட்டியுள்ளார்.
  அதன் மூலம் தனக்கு நீதி கிடைக்கும் என நம்பியுள்ளார்.

  ஓல்ட்ஹாமின் குளோட்விக் மற்றும் அலெக்ஸாண்ட்ரா பார்க் பகுதிகளில் உள்ள மரங்கள், விளக்குகள் மற்றும் கார்களில் கூட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது.

  சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அந்த படங்களில் கையால் எழுதப்பட்ட குறிப்புகளில் ‘CHEATER ALERT’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

  “நீங்கள் உங்கள் மனைவியை ஏமாற்றுகிறீர்களா? விரைவில் வெளிப்படும் (sic). நீங்கள் *** ஏமாற்றுக்காரரா?” எனவும் குறிபிடப்பட்டுள்ளது.

  மற்றொன்றில் “இன்று இரவு உங்கள் கணவர் எங்கே இருக்கிறார் தெரியுமா? நேற்று இரவு? கடந்த வாரம்?” என எழுதப்பட்டு இருந்தது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

  இதே போல் கடந்த 2019 ஆம் ஆண்டில், ஒரு நபர் தனது விசுவாசமற்ற காதலியிடமிருந்து பிரிந்து செல்வதை மிகவும் கொடூரமான முறையில் அறிவித்தார்.

  அந்த நபர் தனது விசுவாசமற்ற காதலியுடன் பிரிந்ததை அறிவிக்க ஒரு முக்கிய வீதியில் ஒரு விளம்பர பலகையை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் தெரியப்படுத்தினார்.

  அந்த நபர் முன்னாள் காதலியின் படத்தையும் விளம்பர பலகையில் வைத்து, “நீங்கள் என் இதயத்தை உடைத்துவிட்டீர்கள். நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள், நான் பிரிந்து செல்ல விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்

  விளம்பர பலகையைத் தவிர, அந்த நபர் ஒரு மெகாஃபோனில் பிரிந்ததை அறிவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  20 − three =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »