ஏப்ரல் 22, 2021, 1:15 காலை வியாழக்கிழமை
More

  கொரோனா: இப்படியும் அறிகுறியோடு வருதாம்! ஜாக்கிரதை!

  corona-test
  corona-test

  புதிது புதிதாக மாறுபாடு அடைந்த கொரோனா வந்துகொண்டே இருக்கிறது. 2020ம் ஆண்டு மார்ச் மாதம் போலவே 2021 மார்ச்சில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

  மக்கள் மத்தியில் அது பற்றிய அச்சம், விழிப்புணர்வுதான் இல்லை. 2020 கொரோனாவையே சமாளித்துவிட்டோம், புதிதாக வரும் கொரோனா எல்லாம் எம்மாத்திரம் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், மாறுபாடு அடைந்த கொரோனா மிகக் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

  கொரோனா பாதிப்பு என்றால் சுவை உணர்வு குறைந்துவிடும், காய்ச்சல், தொண்டை வலி, தீவிர நிலையில் சுவாசப் பிரச்னை வரும் என்று நம்பியிருந்தோம். ஆனால், இப்போது பரவும் கொரோனாவின் அறிகுறிகள் வித்தியாசமாக இருக்கிறதாம்.

  வாய் மற்றும் நாக்கில் புண்களை ஏற்படுத்துகிறது. பல கொரோனா நோயாளிகள் தங்களுக்கு வாயில், நாக்கில் புண் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். தீவிர காய்ச்சல், சோர்வு இதனுடன் வாய்ப்புண்ணும் இருந்தால் அது கொரோனாவுக்கான அறிகுறியாக இருக்கும் என்று பீதியைக் கிளப்புகின்றனர் மருத்துவர்கள்.

  சருமத்தில் வீக்கம், குறிப்பாக காய்ச்சலுடன் கை – கால் விரல்கள் பகுதியில் வீக்கம், சோர்வு இருந்தால் அது கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர். பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகள், இளம் வயதினருக்கு இது போன்று சரும வீக்கம், கொப்பளங்கள், எரிச்சல் உணர்வு ஏற்படுகிறதாம்.

  இன்னொன்று மிக மோசமான அறிகுறியை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். அது வெளிப்படையாகத் தெரியாது.

  மாரடைப்பு போன்ற அறிகுறியை ஏற்படுத்தும்போதுதான் அது கொரோனாவாக இருக்கலாம் என்று தெரியும் என்கின்றனர். ஆம், ரத்தத்தைக் கட்டிப்போகச் செய்கிறதாம் கொரோனா. ரத்தம் கட்டியாவதன் காரணமாக உடல் முழுக்க ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. ரத்தக் குழாய்கள், உள் உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன.

  இதன் காரணமாக இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர்.

  எனவே, மக்களே தயவு செய்து கொரோனா பரவல் குறித்து அலட்சியம் காட்ட வேண்டாம். மூன்று லேயர் மாஸ்க், கைகளை அவ்வப்போது சுத்தம் செய்வது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுங்கள்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »