ஏப்ரல் 20, 2021, 2:55 மணி செவ்வாய்க்கிழமை
More

  வீடியோ கால் ஆன்னில் இருக்கும் போதே உணவு உண்ட வக்கீல்! வைரல்!

  court online - 1

  உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் இருந்து மக்கள் யாரும் வெளி இடத்திற்கு செல்லாததன் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் தொடர்பான சந்திப்புகள் அனைத்துமே ஆன்லைன் வழியாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படி ஆன்லைன் மூலமாக தொடர்பு கொள்ளும்போது சில தவறுகளால் பல வித்தியாசமான சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

  அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் ஹத்ரஷால் ராஜ். இவர் வீடியோ கால் மூலமாக நடைபெற்ற விசாரணையில் கலந்து கொண்டிருந்துள்ளார்.

  அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஹத்ரஷால் மேத்தாவும் கூட இருந்துள்ளார்.

  court online1 - 2

  இதையடுத்து வீடியோ கால் அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக நினைத்த ஹத்ரஷால் கேமராவை வைத்துக் கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். இதைக்கண்ட ஹர்ஷத் மேத்தா கைகாட்டி அழைத்துள்ளார். ஆனால் அழைப்பை மீட் செய்து வைத்திருந்துள்ளார்.

  இதையடுத்து உடனடியாக மேத்தா தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கேமரா ஆனில் இருப்பதாக கூறியதால், கையில் இருந்த தட்டை வைத்துவிட்டு பதட்டத்துடன் மீண்டும் வழக்கில் கவனம் செலுத்தியுள்ளார்.

  ஆனால் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட மேத்தா தனக்கும் உணவை அனுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,116FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »