ஏப்ரல் 22, 2021, 5:29 மணி வியாழக்கிழமை
More

  பைக்கை இடித்து விட்டு சென்ற ட்ரக்! ட்ரக் கில் தொங்கியபடியே பயணித்த இளைஞர்!

  track2 - 1

  பிரேசில் அரங்கேறிய கொடூர சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஓர் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அ

  திக வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் டிரக்கின் பக்கவாட்டு (கதவு) பகுதியில் இளைஞர் ஒருவர் தொங்கியபடிச் செல்லும் அக்காட்சியே, தற்போது வாகன ஓட்டிகளை உறைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

  ட்ரக்கின் முன்பகுதியில், பாதியளவு நுழைந்தபடி இழுத்து செல்லப்பட்ட பைக்கின் காட்சிகளும் அவ்வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன. இதனைப் பார்த்த பலரும் இப்படியும் சம்பவங்கள் நடைபெறுமா, என அதிர்ச்சியில் முற்றிலுமாக உறைந்திருக்கின்றனர்.

  track 1 - 2

  நிதானமின்றி சாலையில் டிரக்கை இயக்கி வந்த அந்த டிரைவர் முன்னதாக பைக்கின்மீது மோதியிருக்கின்றார். இதையடுத்தே, ட்ரக்கின் பக்கவாட்டு பகுதியில் உயிரை பணயம் வைத்து தொங்கியபடி இளைஞர் பயணித்திருக்கின்றார்.

  விபத்தை ஏற்படுத்திவிட்டு ட்ரக்கை நிறுத்தாமல் சென்றதன் காரணத்தினாலயே இந்த விபரீத செயலில் இளைஞர் களமிறங்கியதாகக் கூறப்படுகின்றது.

  track1 - 3

  இதுமட்டுமின்றி, ட்ரக் மோதியதன் காரணத்தினால் இளைஞருடன் பயணித்த அவரது மனைவி பலத்த காயங்களினால் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறார். இந்த கொடூர நிகழ்வின் காரணத்தினாலேயே ட்ரக் நிறுத்தாதபோதும் விடாப்பிடியாக அந்த இளைஞர் தொங்கியபடி பயணித்திருக்கின்றார்.

  அவ்வாறு தொங்கியபடியே சுமார் 30 கி.மீட்டருக்கும் அதிகமான தூரம் வரை ட்ரக்கில் தொங்கியபடி இளைஞர் பயணித்ததாகக் கூறப்படுகின்றது.

  track3 - 4

  மேலும், சம்பவத்தின்போது ட்ரக்கின் டிரைவர் ஆக்ரோஷமாகவும், மிகவும் முரட்டுத் தனமாகவும் நடந்துக் கொண்டதாக ட்ரக்கை நிறுத்த முயன்ற மற்ற வாகன ஓட்டிகள் தெரிவித்திருக்கின்றனர்.

  இருப்பினும், விடாப்பிடியாக விரட்டிச் சென்ற வாகன ஓட்டிகள் ஒரு வழியாக ட்ரக் டிரைவரை மடக்கி இளைஞரை மீட்டிருக்கின்றனர். தொடர்ந்து, அடாவடி தனத்தில் ஈடுபட்ட ட்ரக் ஓட்டுனரையும் போலீஸிடத்தில் பிடித்து கொடுத்திருக்கின்றனர்.

  bike 1 1 - 5

  பிரேசில் நாட்டில் உள்ள சான்டா கேடரினா (Santa Catarina) எனும் பகுதியிலேயே நெஞ்சை உறைய வைக்கக் கூடிய இச்சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. ட்ரக் டிரைவர் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தியிருந்ததாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

  இதை உறுதிப்படுத்தும் வகையில் சில போதைப் பொருட்களைப் போலீஸார் ட்ரக்கில் இருந்து பறிமுதல் செய்திருக்கின்றனர்.

  track4 1 - 6

  முன்னதாக, இளைஞர் ஆபத்தான நிலையில் இருப்பதைக் உணர்ந்த பிற வாகன ஓட்டிகள் ட்ரக்கை பல முறை எச்சரித்திருக்கின்றனர். ஆனால், அவர்களையும் அச்சுறுத்தும் வகையில் அந்த டிரைவர் நடந்துக் கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் வாசிகள் ஊடகங்களிடத்தில் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

  இந்த நிலையிலேயே பெரும் விடா முயற்சியின் அடிப்படையில் இளைஞர் பிற வாகன ஓட்டிகள் பத்திரமாக மீட்டெடுத்திருக்கின்றார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »