spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்வறுமையகற்றும் தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்! தமிழ் அர்த்தத்துடன்..!

வறுமையகற்றும் தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்! தமிழ் அர்த்தத்துடன்..!

- Advertisement -
sivan
sivan

வசிஷ்டர் இயற்றிய இந்த ஸ்தோத்திரம் தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம் என்று அழைக்கப்படுகிறது இதற்கு வறுமை அகற்றி வரம் அளிக்கும் சிவபெருமான் என்று பொருள்.

விஷ்வேஷ்வராய நரகார்ணவதாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகரதாரணாய
கர்ப்பூரகாந்திதவலளாய ஜடாதராய
தாரித்ர்யது:க்கதஹனாய நம:சிவாய!!

எல்லா உலகுகளுக்கும் தலைவராக விளங்குபவர் நரகம் என்ற கடலை கடக்க செய்பவர். செவிகளுக்கு அமுதம் போன்ற பெயரை உடையவர். பிறை சந்திரனை தலையில் அணிந்தவர். கற்பூரத்தின் ஒளி போன்று ஒளிர்பவர். ஜடை முடியை உடையவர். வறுமையையும் துக்கத்தையும் பொசுக்கி எரிப்பவர் ஆகிய சிவபெருமானுக்கு வணக்கம்.

கௌரீப்ரியாய ரஜனீசகலாதராய
காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
கங்காதராய கஜராஜவிமர்தனாய
தாரித்ர்யது:க்கதஹனாய நம:சிவாய!!

கௌரியின் அன்பிற்குரியவர். சிலையை அணிந்தவர் கால தேவனானவர். பாம்புகளின் தலைவனை தனது கரங்களில் கங்கணமாக அணிந்தவர். கங்கையை சடையில் தாங்கியவர். யானைகளின் தலைவனை அழித்தவர். வறுமையையும் துக்கத்தையும் பொசுக்கி எரிப்பவர் ஆகிய சிவபெருமானுக்கு வணக்கம்.

பக்திப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துர்கபவஸாகர தாரணாய
ஜோதிர்மயாய குணநாமஸூந்ருத்யகாய
தாரித்ர்யது:க்கதஹனாய நம:சிவாய!!

பக்தி உடையவர்களுக்கு பிரியமானவர். பிறப்பு இறப்பு என்ற பெரும் நோயால் தோன்றும் பயத்தை நீக்குபவர். தீயவர்கள் கண்டு பயப்படும் பயங்கர வடிவம் உடையவர். எளிதில் கடக்க முடியாத சம்சாரம் என்ற கடலைத் தாண்ட செய்பவர். ஒளி வடிவமான அவர் தனது பெயரையும் நற்குணங்களையும் துதிக்கும்போது மகிழ்ந்து ஆனந்த நடனம் புரிபவர். வறுமையும் துக்கத்தையும் பொசுக்கி எரிப்பவர் ஆகிய சிவபெருமானுக்கு வணக்கம்

சர்மாம்பராய சவபஸ்மவிலேபனாய
பாலக்ஷானாய மணிகுண்டல மண்டிதாய
மஞ்ஜீரபாதயுகளாய ஜடாதராய
தாரித்ர்யது:க்கதஹனாய நம:சிவாய!!

யானைத் தோலை ஆடையாக அணிந்தவர். மயான பூமியில் உள்ள சாம்பலை உடல் முழுவதும் பூசி இருப்பவர். நெற்றிக்கண் உடையவர். ரத்தின குண்டலங்கள் அணிந்தவர். பாத சலங்கைகளால் அழகுடன் மிளிரும் கால்களை உடையவர். ஜடாமுடி கொண்டவர் வறுமையும் துக்கத்தையும் பொசுக்கி எரிப்பவர் ஆகிய சிவபெருமானுக்கு வணக்கம்.

பஞ்சானனாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்சுகாய புவனத்ரயமண்டிதாய
ஆனந்த பூமிவரதாய தமோமயாய
தாரித்ர்யது:க்கதஹனாய நம:சிவாய!!

sivan
sivan

ஐந்து முகங்களுடையவர். பாம்புகளின் அரசனை அணிகலனாகக் கொண்டவர். தங்கமயமான ஆடை அணிந்தவர். மூன்று உலகத்தையும் அலங்கரிப்பவர். ஆனந்தத்திற்கு இருப்பிடமானவர். பக்தர்களுக்கு நல்ல வரங்களை தருபவர். வெளித்தோற்றத்திற்கு தமோகுண வடிவமானவர். வறுமையையும் துக்கத்தையும் பொசுக்கி எரிப்பவர் ஆகிய சிவபெருமானுக்கு வணக்கம்.

பானுப்ரியாய பவசாகரதாரணாய
காலாந்தகாய கமலாஸன பூஜிதாய
நேத்ரத்ரயாய சுபலக்ஷண லக்ஷிதாய
தாரித்ர்யது:க்கதஹனாய நம:சிவாய!!

சூரியனிடம் அன்பு கொண்டவர். சம்சாரம் என்ற கடலைக் கடப்பதற்கு உதவி செய்பவர். அந்தகன் ஆகிய எமனுக்கு எமன் போன்றவர். பிரம்ம தேவரால் வழிபடப்படுபவர் மூன்று கண்கள் உடையவர். மங்களகரமான லட்சணங்கள் கொண்டவர். வறுமையும் துக்கத்தையும் பொசுக்கி எரிப்பவர் ஆகிய சிவபெருமானுக்கு வணக்கம்.

ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ணவதாரணாய
புன்யேக்ஷு புண்யபரிதாய சுரர்ச்சிதாய
தாரித்ர்யது:க்கதஹனாய நம:சிவாய!!

ராமரிடம் அன்பு கொண்டவர். ரகுநாதனுக்கு வரமளித்தவர். நாகராஜனிடம் அன்புள்ளவர். நரக பயத்தை அழிப்பவர். புண்ணியம் செய்யும் சான்றோர்களுக்கு புண்ணிய வடிவம் காண்பிப்பவர். தேவர்களால் வழிப்படப்படுபவர். வறுமையும் துக்கத்தையும் பொசுக்கி எரிப்பவர் ஆகிய சிவபெருமானுக்கு வணக்கம்.

முக்தேஷ்வராய பலதாய கணேஷ்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச்வர வாஹனாய
மாதங்க சர்மவஸனாய மஹேஷ்வராய
தாரித்ர்யது:க்கதஹனாய நம:சிவாய!!

முக்தியை வழங்கும் ஈஸ்வரன். அவரவர் கர்மவினைக்கு ஏற்ப பலனைத் தருபவர். கணங்களின் தலைவன் இன்னிசையில் விருப்பமுடையவர். காளை மாட்டை தனது வாகனமாக உடையவர். யானைத் தோலை ஆடையாக அணிபவர் மகேஸ்வரன் என்று போற்றப்படுபவர். வறுமையையும் துக்கத்தையும் பொசுக்கி எரிபவர் ஆகிய சிவபெருமானுக்கு வணக்கம்.

வஸிஷ்டேன க்ருதம் ஸ்தோத்திரம் ஸர்வரோகநிவாரணம்!
ஸர்வசம்பத்கரம் சீக்ரம் புத்ரபௌத்ராதிவர்தனம் த்ரிஸந்த்யம் ய:படந்நித்யம் ஸ ஹிஸ்வர்கமவாப்னுயாத்!!

வசிஸ்டரால் இயற்றப்பட்டதும் எல்லா விதமான நோய்களைப் போக்க கூடியதும் அனைத்து வித செல்வங்களையும் விரைவில் அளிக்கக் கூடியதும் மகன் பேரன் என்ற குலத்தைப் பெருக செய்வதும் ஆகிய இந்த துதியை 3 காலங்களிலும் தினமும் துதிப்பவன் புண்ணிய லோகத்தை அடைவான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe