spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஈசன்: எந்நாட்டவர்க்கும் இறைவன்!

ஈசன்: எந்நாட்டவர்க்கும் இறைவன்!

- Advertisement -

எகிப்தில் நைல் நதிக்கரையில் ஒருவர் சிவலிங்கத்திற்கு பூஜை செய்து கொண்டிருப்பதை நீங்கள் கற்பனை செய்தது உண்டா
கற்பனை செய்ய வேண்டாம் உண்மையான வரலாற்று ஆராய்ச்சிகளில் தெரிய வந்த செய்தி. வேதகால நாகரிகத்திலும் சிந்து நதி நாகரிகத்திலும் சிவ வழிபாட்டைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

ரிக் வேதத்தில் சிவனை ருத்ரன் என்று குறிப்பிட்டார்கள். அதர்வண வேத காலத்தில் சிவன் சிவலிங்க வழிபாடு பரவலாக இருந்தது. மகாதேவனின் பெருமைகளைப் பற்றி யஜுர் வேதம் கூறுகிறது.

இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி நாகரிகமும் யூப்ரடஸ் டைக்ரிஸ் நதிக்கரை நாகரீகமும் எகிப்தின் நைல் நதிக்கரை நாகரிகமும் சிறப்பாக திகழ்ந்தன.

1300 ஆண்டுகளுக்கு முன் இந்த மேற்காசிய நாடுகளில் எகிப்தும் உலகத்திலேயே மிகச் சிறந்து விளங்கின என்று மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பின்னர் இந்த நாடுகள் முகமதியர் ஆட்சிக்கு உட்பட்டதால் தொன்மையான நாகரீகங்கள் முற்றிலும் மறைந்து விட்டன.

ஆதிமனிதன் காட்டில் திரிந்து வாழ்ந்த போது வெவ்வேறு உயிரினங்களின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் கண்டான். பல்வேறு படைப்புகளின் சிறப்பைக் கண்டு அதிசயித்த மனிதன் பூமியையும் பெண்களையும் ஆதாரமான தாய் கடவுளாக வழிபட்டான்.

சூரியனை படைப்புக்கு வேண்டிய சக்தியை கொடுக்கும் தந்தை தெய்வமாக ஆராதித்தான். நாகரீக வாழ்வு வெகுவாக வளர்ச்சி அடைந்த போது மனிதன் கதிரவனை செந்நிறமுடைய முழுமுதற் கடவுள் சிவனாக வழிபட்டான்.

பெரும்பாலும் சிவனை பூமியின் மேல் நடப்பட்ட கல் தூணாகவும்(லிங்கம்) அல்லது மிக்க வலிமையுடன் செழுமையாக வளர்ந்த காளை வடிவத்திலும் இந்த நாகரிகங்களை சார்ந்த மக்கள் வழிபட்டார்கள். பாம்பையும் காளையையும் பசுவையும் கடவுளர்களாக எகிப்தியர்களும் கிரேக்கர்களும் ரோமானியர்களும் வழிபட்டார்கள்.

நைல் நதிக்கரையில் பெரும்பாலும் உழவர்களாக வாழ்ந்த எகிப்தியர் சூரியனையே அமன்- amon ரே – re ஒசிரிஸ் – Osiris என்று தங்களின் தலைமை கடவுளாக வழிபட்டனர்.

அமன் என்னும் கடவுளை லிங்க வடிவத்திலும் ஒசிரிஸை காளை வடிவிலும் எகிப்தியர்கள் வழிபட்டார்கள்.

எகிப்தியர் பூமியின்மேல் பதிய வைத்த கல்தூண்கள் லிங்கங்களாகவும் ஹெம்- hem ஹோரஸ் – Horus உசேர் – Osiris இஸ்ரிஸ் – isris சராபிஸ்- charaphis என்ற கடவுளர்களையும் புலி பாம்பு காளை இவற்றையும் வழிபட்டனர்.

ஒசிரிஸ் என்னும் தந்தை கடவுளின் மனைவியே இசிஸ் என்னும் தாய் கடவுள். எகிப்தியர் கோயில்களில் பூசாரிகள் புலித்தோல் அணிந்து கொண்டு கடவுளுக்கு வழிபாடு செய்தார்கள்.

சுமேரியர்களின் முழுமுதற் கடவுளை ஆன்-ann எல்- ell என்றும் அழைத்தனர் அசுர்-asur பால்- baal பேல்- bel மார்டூக்- marduch ஆதாத்- adad என்று தங்களுடைய முழு முதற் கடவுளை தந்தை தெய்வமாக வழிபட்டனர். இந்த கடவுளர்களுக்கும் காளை (ரிஷபம்) தான் வாகனமாகும். இவர்கள் தங்கள் கைகளில் திரிசூலம் அல்லது வஜ்ராயுதத்தையும் மழுவையும் ஏந்தி இருந்தார்கள். இக்கடவுள் எல்லாம் மலை உச்சியில் வாழ்ந்ததாக மக்கள் நம்பினார்கள். எனவே அவர்களுக்கு மலைகளிலேயே கோயில்களை அமைத்து வழிபட்டார்கள்.

பாபிலோனியர்: பாபிலோனியரின் ராஜ்யத்திலிருந்த ஒரு நகரத்தின் பெயரே சிவன் என்றிருந்தது. அங்கிருந்த பிரதான கோயிலில் சிவவழிபாடு நடந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆசியாமைனர்- சிரியா அசிரியர்களின் தந்தை கடவுள் ஆதாத். அவர் மனைவியின் பெயர் இஸ்தர்- ishtar. இந்தத் தாய் கடவுளின் வாகனம் சிம்மம். இப்பகுதியில் வாழ்ந்த ஹிட்டையிட்(Hittite) வகுப்பினரிடமும் லிங்க வழிபாடு பரவலாக காணப்பட்டது.

ஆசியாமைனரிலும் சிரியாவிலும் மக்கள் லிங்கங்களை வெவ்வேறு பெயர் கொண்டு வழிபட்டுள்ளனர். கேமோஸ்- chemos ஆதோனியிஸ் – adinais மொலோச் – moloch சிபாஃசியஸ்- sabazius பகாயிஸ்- bagaios வெஸ்ட்ரோப்- westropp என்று பட்டியல் நீள்கிறது. இதில் ஆதோனியிஸ் வேறு யாருமில்லை அர்த்தநாரீஸ்வரரே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சிரியர்கள் கல் தூண்களை கடவுளின் படைக்கும் வல்லமை எனவும் அருகே நடப்பட்டு இருந்த மரத்தூண்களை பெற்றெடுக்கும் வல்லமை கொண்ட தாய் கடவுள் என்றும் கருதி வழிபட்டு வந்தார்கள்.

யூதர்கள்: இவர்களும் தங்களின் முழு முதற்கடவுளான யூகோவாவை – Yahweh காளையில் உருவத்திலேயே வணங்கி வந்தார்கள். விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள சியன் என்ற கடவுளை சிவன் என்றே கொள்ள வேண்டும் என்பது தற்கால ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

கிரேக்கர்கள் லிங்க வழிபாடு மிகப் பரவலாக இருந்தது இவர்கள் சங்கு ஊதி கடவுளர்களை வழிபட்டார்கள் மக்களில் பெரும்பாலோர் மாலுமிகள் ஆகவும் மீனவர்கள் ஆகவும் வாழ்ந்தார்கள். அவர்கள் தங்களுடைய பிரதான தந்தை கடவுளை காளையின் மீது நின்ற நிலையிலேயே வழிபட்டார்கள்.

கிரேக்கர்களும் லிங்கங்களை ப்ரியபஸ் – priabus பக்கஸ்- Bacchus டையோனிசஸ்- dionisus என்ற பெயர்களுடன் வழிபட்டார்கள். இதில் பக்கஸ் என்ற கடவுளை புலி காளையின் சிலைகளுடன் வழிபட்டார்கள்‌. இந்த கடவுளின் ஆடை புலி தோலினால் ஆனது. இவர் கையில் திரிசூலமும் மழுவும் இருந்தது.

ரோமானியர்கள்: இத்தாலியில் பண்டைய ரோமர்கள் தங்கள் பங்குக்கு ஹெபின் – hebin என்ற பெயருடைய லிங்கங்களை ஹெபி – Hebe என்ற பெண் தெய்வத்துடனும் புலி மற்றும் காளையின் உருவத்துடனும் வழிபட்டார்கள்.

எகிப்திலும் மேற்கு ஆசிய நாடுகளிலும் மத்தியதரைகடலில் உள்ள தீவுகளிலும் அதன் கரையை ஒட்டியுள்ள ஆப்பிரிக்கா ஐரோப்பா நாடுகளிலும் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பண்டைய மக்களின் சமயங்களையும் அவர்களின் கடவுள் வழிபாட்டு முறைகளையும் நுணுக்கமாக வரலாற்று அறிஞர்கள் ஆராய்ந்தார்கள்.
அவ்வாறு ஆராய்ந்ததில் தொன்றுதொட்டு நம் பாரத நாட்டில் வழங்கி வரும் சிவ வழிபாட்டு முறைகளுக்கு அதிக வேறுபாடுகள் இல்லாமல் அடிப்படை வழிபாடுகளில் ஒற்றுமை இருப்பதை அவர்கள் அறிந்து கூறியுள்ளார்கள்.

இந்த உண்மையை நம் நாட்டு அருளாளர்கள் ஈசனே எந்நாட்டவர்க்கும் இறைவா என்று முன்னமே கூறிவிட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe