Home இந்தியா இனி ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு.. விதியை மாற்றிய RBI!

இனி ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு.. விதியை மாற்றிய RBI!

credit card debit card

சமீப காலமாக ஆன்லைன் திருட்டுகள் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து ஆர்பிஐ ஒரு முக்கியமான செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்விகி போன்ற வலைதளங்களுக்குச் செல்லும்போது கார்டு விவரங்களை சேமித்து வைத்துவிட்டு அடுத்த முறை ஷாப்பிங் செய்யும்போது OTP எண்களை மட்டுமே பதிவு செய்து ஷாப்பிங் செய்து வழக்கம்.

இதனால் வங்கி தகவல்களுடன் அக்கௌண்ட்டில் உள்ள பணமும் திருடப்படுவதாக வங்கியிலிருந்து ஆர்.பி.ஐக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனால் இனி ஒவ்வொரு முறை ஷாப்பிங் செய்யும்போதும், ஏ.டி.எம். கார்டில் இருக்கும் 16 இலக்க எண்கள், பெயர் மற்றும் கார்டு காலாவதியாகும் தேதி என அனைத்து விவரங்களையும் புதிதாக பதிவு செய்து கொள்ள வேண்டும் .

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளில் 16 இலக்க எண்கள் இருக்கும். ஆன்லைன் பணப்பரிவர்த்தனையின் போது நிறுவனங்கள், கார்டு விவரங்களை சேமித்து வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்டதும் சரியாக ஆம் என்று கொடுத்து விடுவதால் இந்த பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

அப்படி என்றால் அடுத்த முறை பணப்பரிவர்த்தனை செய்யும் போது 16 இலக்க எண்ணை டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதும் ஒரு காரணம். கார்டு வேலிடிட்டி, சிவிவி நம்பர் கொடுத்தால் போதுமானது. ஓடிடி வரும் பரிவர்த்தனையை முடித்துவிடலாம்.

21 May28 rbi

ஆனால் இந்த முறையை தடுக்கும் விதமாக ஆர்பிஐ ஒவ்வொரு முறை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் போதும், 16 இலக்க எண்ணை டைப் செய்ய வேண்டும். நேரடியாக கார்டு வேலிடிட்டி, சிவிவி எண் மூலம் பணம் செலுத்த முடியாது.

அதாவது உங்கள் கார்டு விவரங்கள் நிறுவனங்களால் சேமிக்க முடியாது. இந்த விதி அமேசான், ஃபிளிப்கார்ட், கூகுள்பே, பேடிஎம், நெட்பிளிக்ஸ் இவற்றிற்கு பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஆன்லைன்ட கார்டு மோசடியை பெருமளவு தடுக்க முடியும் எனவும் இந்த முறை ஜூலை மாதம் அமலுக்கு வருவதாகவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version