Home இந்தியா ஏப்ரல் 1 முதல் இந்த வங்கிகளின் பழைய காசோலை செல்லாது!

ஏப்ரல் 1 முதல் இந்த வங்கிகளின் பழைய காசோலை செல்லாது!

புதிய IFSC code, புதிய செக் புக், புதிய அக்கவுண்ட் நம்பர், புதிய ஏடிஎம் போன்றவை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த வங்கிகளில் மாறப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய வங்கிகளுக்கான விதிமுறைகள் அமலுக்கு வருவதால் இந்த எட்டு வங்கிகளில் பழைய செக் புக் போன்றவை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கித் துறையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக பேங்க் ஆஃப் பரோடா பேங்க், விஜயா பேங்க் ஆகிய வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியாவின் பழமையான வங்கியை அலகாபாத் வங்கி இந்திய வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சிண்டிகேட் பேங்க் கனரா வங்கியுடனும், ஆந்திரா பேங்க் கார்ப்பரேஷன் பேங்க் இணைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு அதன் வாடிக்கையாளர்கள் இடையே குழப்பம் நிலவி வருகிறது. டெபாசிட் பணத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர். அதேபோல் வங்கிகளில் வாங்கிய கடன் என்ன ஆகும் என்று பலரும் அஞ்சி வருகின்றனர், இதில் டெபாசிட் மற்றும் வாங்கிய கடனில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று வங்கிகள் உறுதியளித்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் மட்டும் ஐஎப்சி கோடு போன்றவற்றில் விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது .ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய வங்கி விதிமுறைகள் அமலுக்கு வந்தால் இந்த எட்டு வங்கி வாடிக்கையாளர்களின் காசோலை புத்தகம் மற்றும் அவர்களின் பழைய காசோலை புத்தகம் இனி செல்லாது.

சிண்டிகேட் மற்றும் கனரா பேங்க் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஜூன் 30 வரையில் பழைய காசோலைப் புத்தகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கால அவகாசம் வழங்கியுள்ளது. மற்ற வங்கிகள் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முதல் புதிய காசோலைப் புத்தகத்தை மாற்றியாக வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version