ஏப்ரல் 18, 2021, 10:21 காலை ஞாயிற்றுக்கிழமை
More

  2 மாதங்களில் ரூ.16 கோடிக்கு பர்னிச்சர் டெலிவரி செய்த சிறைக் கைதிகள்!

  கோவிட் சமயத்தில் அவற்றை ஏற்பாடு செய்தார்கள். அதேபோல் கைத்தறி தொழில் மூலம் மாஸ்க்களை தயார் செய்வது, தொழிற்சாலைகள் மூலம்

  prisonner - 1

  காலத்தோடு வேகமாக முன்னேறி வரும் சிறைக் கைதிகள்:
  இரண்டு மாதங்களிலேயே ரூ.16 கோடிக்கு பர்னிச்சர் டெலிவரி செய்கிறார்கள் சிறைக் கைதிகள்.  இது என்ன என்று கேட்கிறீர்களா?

  தெலங்காணா மாநிலத்தில் உள்ள பல சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளோடு கூட விசாரணையை எதிர்கொண்டு வரும் கைதிகளும் சேர்ந்து காலத்திற்குச் சமமாக வேகத்தோடு பணிபுரிவதில் முன்னிற்கிறார்கள். 

  வெறும் இரண்டு மாத இடைவெளியில் மிகப்பெரிய அளவில் பர்னிச்சர் ஆர்டரை பூர்த்தி செய்யும்  பணியில் ஈடுபட்டுள்ளார் கள். தெலங்காணா மாநில அரசாங்கம் அளித்த பர்னிச்சர் ஆர்டர்களை கிடுகிடுவென்று பூர்த்தி செய்து வருகிறார்கள்.

  மொத்தம் 20,000 எஸ் டைப் நாற்காலிகள், 5200 ஸ்டீல் டேபிள்கள், 2600 ஸ்டீல் அலமாரிகளை அவர்கள் வடிவமைத்து டெலிவரி செய்து வருகிறார்கள்.

  தெலங்காணா மாநில அரசாங்கம், மாநிலத்தில் பெரிய அளவில் விவசாய மேடைகளை ஏற்பாடு செய்து வரும் விஷயம் தெரிந்ததே.  அதில் ஒரு பகுதியாக மொத்தம் 2601 விவசாய மேடைகளை ஏற்பாடு செய்வதற்குத் தேவையான பர்னிச்சர்களைத் தயார் செய்வதற்காக சிறைச்சாலை துறையை அணுகினார்கள். இந்த துறைக்கு பர்னிச்சர் செய்வதற்கான ஆர்டரை அரசாங்கம் அளித்தது.

  மொத்தம் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டரை அரசாங்கம் சிறைச்சாலைத் துறைக்கு அளித்துள்ளது. இந்த ஆர்டரை கைதிகள் வெறும் இரண்டு மாதங்களிலேயே பூர்த்தி செய்கிறார்கள். 

  செர்லபல்லியில் உள்ள சென்ட்ரல் ஜெயிலில் மொத்தம் ஃபர்னிச்சர் பணியில் 30 சதவிகிதம் வரை வேலைகள் நடந்து வருகையில் மீதியுள்ள ஆர்டரை பிற சிறைச்சாலையில் உள்ள கைதிகள் செய்து வருகிறார்கள். பர்னிச்சர் ஒர்க் செய்யும் கைதிகளுக்கு தினமும் 100 ரூபாய்க்கு மேலாக கூலியோடு இன்சென்டிவ் கூட அளிக்கிறார்கள்.

  இந்த வகையில் செர்லபல்லி ஜெயிலில் 350  கைதிகளும் சஞ்சல்கூடா ஜெயிலில் 2009 பேர் கைதிகளும் ஷிப்டில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பர்னிச்சர்களை பிப்ரவரி 24ம் தேதியில் இருந்து டெலிவரி செய்து வருகிறார்கள். ஏப்ரல் மாத முடிவிற்குள் மொத்தம் பணியை  பூர்த்தி செய்ய உள்ளார்கள்.

  telengana prisons - 2

  தெலங்காணா சிறைச்சாலைத் துறை தலைமையில் இதுவரை பல தொழிற்சாலைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 600 கோடி ரூபாய்க்கு மேல் டர்ன்ஓவர் சாதித்து வருகிறார்கள். அதில் 550 கோடி டர்ன்ஓவரை 25 பெட்ரோல் பங்குகள் மூலம் சாதித்துள்ளார்கள்.  அவற்றை முன்னாள் கைதிகள் நிர்வகித்து வருகிறார்கள்.

  கோவிட் சமயத்தில் அவற்றை ஏற்பாடு செய்தார்கள். அதேபோல் கைத்தறி தொழில் மூலம் மாஸ்க்களை தயார் செய்வது, தொழிற்சாலைகள் மூலம் ஹேண்ட் வாஷ், சானிடைசர்களை தயார் செய்வது கூட இதற்கு முன் தொடங்கியுள்ளார்கள். அவற்றை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,229FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,110FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »