ஏப்ரல் 18, 2021, 10:12 காலை ஞாயிற்றுக்கிழமை
More

  கொல்லேட்டி கோட்டை பெத்தின்ட்டி அம்மன் உத்ஸவம்!

  கொல்லேட்டி கோட்டை பெத்தின்ட்டி அம்மன் உற்சவம். கிருஷ்ணா மாவட்டம் கைகலூரு மண்டலம்

  kolletikota temple1 - 1
  • கொல்லேட்டி கோட்டை பெத்தின்ட்டி அம்மன் உத்ஸவம்.
  • கிருஷ்ணா மாவட்டம் கைகலூரு மண்டலம்

  கொல்லேட்டிகோட்டை  கிராமத்தில் கொலுவீற்றிருக்கும் பெத்தின்ட்டி அம்மன் உற்சவம் ஞாயிறன்று தொடங்கியது.
  இந்த மாதம் 28ஆம் தேதி வரை உற்சவங்கள் நடக்கும். கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மாவட்ட எல்லையில் விரிந்துள்ள கொல்லேறு ஏரியின் நடுவில் உள்ள தீவில்  கொல்லேட்டிகோட்டை கிராமம் உள்ளது. 

  இங்கு கோவில்கொண்டிருக்கும் பெத்த இண்டி அம்மனை உள்ளூர் மீனவர்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். ஒன்பது அடி உயரமும் விசால நேத்திரங்களும் கொண்டு வீராசன முத்திரையில் வீற்றிருக்கும் பெத்தின்ட்டி  அம்மன் பக்தர்கள் கேட்கும் வரங்களை அருளும்  ஜல துர்காவாக வழிபடப்படுகிறாள். 

  kolletikota temple - 2

  ‘ஜாத்ரா’ உற்சவம் தொடர்பாக கொல்லேரு கிராமத்தில் வசிக்கும் ‘வட்டெர’ குல மக்களோடு கூட அஸ்ஸாம், ஒரிசா, ஆந்திரா, தெலங்காணா மாநிலங்களில் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சேர்வார்கள்.

  ஆலய ஆவரணத்தில் குளிர் பந்தல்கள் போட்டு மின் விளக்குகளால் அலங்கரித்து உள்ளார்கள். கொல்லேட்டி கோட்டைக்குச் செல்லும் வழியில் உள்ள இரும்பு பாலத்தை மராமத்து செய்ததோடு கூட அருகிலேயே தற்காலிகமாக மண் பாதையையும் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

  kolleru lake - 3

  கொல்லேட்டிகோட்டை செல்வதற்கு ஆக்கிவீடு, கைகலூரு, ஏலூரு ஆகிய இடங்களில் இருந்து சாலை வசதி உள்ளது.

  ‘ஜாத்தரா’ உற்சவத்தில் ஒரு பகுதியாக இந்த மாதம் 25ஆம் தேதி ஜலதுர்கா கோகர்ணேஸ்வர ஸ்வாமி திருக்கல்யாணம் நடக்க இருப்பதாக ஆலய  நிர்வாக அதிகாரி கந்துல வேணுகோபாலராவு தெரிவித்தார்.

  kolletikota temple2 - 4

  அதிகார சம்பிரதாயமாக பட்டு வஸ்திரங்கள், முத்துக்கள்  ஆகியவற்றோடு கோகர்ணேஸ்வர சுவாமியை ஊர்வலமாக கொல்லேட்டி கோட்டைக்கு  அழைத்து வந்து கல்யாண மஹோத்ஸவம் நடத்த இருப்பதாக கூறினார்.

  அம்மன் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வண்ணம் அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கோவிட் நிபந்தனைகளை அனுசரித்து நடவடிக்கை எடுத்துக் கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,229FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,110FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »