ஏப்ரல் 20, 2021, 9:20 காலை செவ்வாய்க்கிழமை
More

  ஆண் வீரர்களுடன் குளிக்கவும், உயர் அதிகாரிகள் பாலியல் தொல்லையும்: பெண் இராணுவ வீராங்கனை குற்றச்சாட்டு!

  Canadian Army - 1

  கனேடிய ராணுவத்தில் உள்ள பெண் வீராங்கனைகளுக்கு அதிக அளவு பாலியல் தாக்குதல் ஏற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

  கனேடிய ராணுவத் துறையில் மொத்தம் 198 ஆண்களும், 2 பெண்களும் ராணுவ பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்பின் பெண் வீராங்கனைகளுக்கு கனேடிய ராணுவத்தில் வரவேற்பு இல்லை என்றும், அவர்களை குழந்தை பெறும் இயந்திரங்கள் என விமர்சிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  தற்போது, Alexandra auclair என்ற வீராங்கனை, தன்னை ஆண் ராணுவ வீரர்களுடன் ஒரே குளியலறையில் குளிக்க கட்டாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, மேலும் என்னால் இதற்கு விளக்கமாக சொல்ல முடியாது, ஆனால் அது ஒரு விரும்பத்தகாத சம்பவம் என்று Alexandra கூறியுள்ளார்.

  இந்நிலையில் மேல் அதிகாரி ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், அதிர்ஷ்டவசமாக அவரை தள்ளிவிட்டு தான் அங்கிருந்து தப்பியதாகவும் Alexandra தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக மேலதிகாரி ஒருவரிடம் புகார் அளித்தபோது, உன்னிடம் டிஎன்ஏ அதிகாரம் உள்ளதா? சாட்சி உள்ளதா? என்று கேட்டபோது, அதற்கு இல்லை என்று கூறினார்.

  அப்போது மேலதிகாரி தன்னிடம் உனது ராணுவ பயிற்சி தொடர வேண்டுமென்றால் இதனை மறந்துவிட்டு வேலையை பார் என்று அவர் கூறியதாக Alexandra குற்றச்சாற்று ஒன்றை முன்வைத்துள்ளார்.

  இதுதொடர்பாக Adm.Art McDonald என்ற ராணுவ உயர் அதிகாரி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் வெளியானதால் தன் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

  இதனைக் குறித்து Alexandra புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டால் குற்றங்களை தடுக்க முடியும் என்றும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,115FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »