ஏப்ரல் 21, 2021, 9:38 காலை புதன்கிழமை
More

  பெண் பயணி முன்னே பேண்ட் ஜிப்பை கழற்றிய நபர்! விமானத்தில் பரபரப்பு!

  india-flight
  india-flight

  கொடிய கொரோனா வைரஸ் இந்த உலகத்தை பல விதங்களில் பாதித்த நிலையில் பலரின் வாழ்க்கையும் குடும்பங்களும் சீர்குலைத்து விட்டது ஆனாலும் கொரோனா மீண்டும் அசுர வேகத்தில் பரவ ஆரம்பித்த நிலையில் இன்னும் ஒரு சிலர் இந்த வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இல்லாமல் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

  அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலராடோவை சேர்ந்த நபர் ஒருவர் மாஸ்க்(mask) அணிய மறுத்தது மட்டும் இல்லாமல் தான் பயணம் செய்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் எழுந்து நின்று விமான இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளார்.

  இதனையடுத்து 24 வயதான லாண்டன் க்ரியர் என்பவர் மார்ச் 9 ஆம் தேதி விமானம் தரையிறக்கிய பின்னர் கைது செய்யபட்டுள்ளார்.

  க்ரியர் தூங்க செல்லும் போது mask அணியுமாறு பல முறை விமான பணி பெண் கேட்டுக்கொண்ட போது அவர் சற்றும் கண்டு கொள்ளவில்லை சில நிமிடங்களில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் அவர் தனது பேண்ட் ஜிப்பை கழட்டியுள்ளார் உடனே அருகில் இருந்த பெண் பயணி ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

  கைது செய்த போலீசார் விசாரித்த போது ” தான் குடிபோதையில் இருந்ததாகவும் நான் சிறுநீர் கழித்து நியாபகம் இல்லை” எனவும் கூறியுள்ளார்.

  மேலும், “எங்கள் விமானத்தில் அல்லது நாங்கள் சேவை செய்யும் எந்த விமான நிலையத்திலும் எந்தவிதமான இடையூறுகளையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.” என அலாஸ்கா ஏர்லைன்ஸ் அறிக்கையில் தெரிவித்த நிலையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 250,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படலாம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »