ஏப்ரல் 20, 2021, 4:21 மணி செவ்வாய்க்கிழமை
More

  “வென்று எம்.எல்.ஏ., ஆகி, பிரதமரை அழைத்து வந்து…” அண்ணாமலை சூளுரை!

  வெற்றி பெற்று பாரத பிரதமர் மோடி அவர்களை வரவழைத்து மிகப் பிரமாண்டமான திட்டங்களை துவக்க உள்ளதாக

  annamalai bjp2 - 1

  திமுக.,வைப் பொறுத்தவரை ஒன்று தலைமை மீது அதிருப்தி கொண்ட தொண்டர்கள்… மற்றொன்று உண்மையான தொண்டர்கள் மத்தியில் கலப்பட திமுக.,வினர் அதிகமாகி வருவது… எனவே தமிழக அளவில் திமுக ஜெயிக்க வாய்ப்பில்லை என்று, கரூர் அருகே அரவக்குறிச்சி பாஜக வேட்பாளரும், பாஜக மாநில துணைத் தலைவருமான அண்ணாமலை பேசினார்.

  annamalai bjp - 2

  கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியான அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக வேட்பாளர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில துணை தலைவருமான அண்ணாமலையை ஆதரித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

  கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு வாக்குகள் சேகரித்தார்.

  இந்நிகழ்ச்சியில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மு.தம்பித்துரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சார்ந்த பல்வேறு கட்சிகளின் பிரநிதிகளும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

  இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளரும், பாஜக மாநில துணை தலைவருமான அண்ணாமலை பேசிய போது….

  திமுக.,வைப் பொறுத்தவரை ஏற்கனவே இருந்த எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மீது இத்தொகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். திமுக தொண்டர்கள் தலைமை மீது அதிருப்தி கொண்டிருப்பது ஒருபுறம்… உண்மையான திமுக தொண்டர்கள் மத்தியில் கலப்பட திமுக வினர் சென்று அக்கட்சியினை உடைத்து விடுவது மற்றொன்று… என்று தெரிவித்தார்.

  மேலும், ஒரு சில மாதங்களில் அரவக்குறிச்சி தொகுதியில் தான் வெற்றி பெற்று பாரத பிரதமர் மோடி அவர்களை வரவழைத்து மிகப் பிரமாண்டமான திட்டங்களை துவக்க உள்ளதாகவும், இஸ்லாமியர்கள் யாரும் பாஜக விற்கு எதிரியல்ல என்பதனை இங்கு வந்திருந்தவர்களைப் பார்த்தாலே தெரியும் என்றும் கூறினார்.

  annamalai bjp1 - 3

  மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு தொழில்களை தமிழகத்தில் கொண்டு வர உள்ளதாகவும், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் ஆவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.

  பேட்டி : அண்ணாமலை – பா.ஜ.க அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் மற்றும் பாஜக மாநில துணை தலைவர்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,118FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »