ஏப்ரல் 22, 2021, 5:35 மணி வியாழக்கிழமை
More

  காதலியின் கழுத்தை அறுத்து இணையத்தில் பகிர்ந்த காதலன்!

  Brandon Clark - 1

  நியூயார்க்கில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 22 வயது இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் Bianca Devins என்ற 17 வயது சிறுமி. இவரும் நியூயார்க்கை சேர்ந்த Brandon Clark என்ற 22 வயதான இளைஞரும் இணையம் மூலமாக சந்தித்து நண்பர்கள் ஆனவர்கள்.

  இந்நிலையில் இருவரும் இசை நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்றுள்ளனர். அங்கு Bianca தனது மற்றொரு நண்பர் Alex-ற்கு முத்தம் கொடுத்துள்ளார்.

  இதனை பார்த்த Brandon ஆத்திரத்தில் இருந்துள்ளார். பின்னர் காரில் வீடு திரும்பியபோது Brandon நீ ஏன் அவனுக்கு முத்தமிட்டாய் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று Bianca பதில் அளித்துள்ளார்.

  இந்த பதில் Brandon-ஐ ஆத்திரமடையச் செய்துள்ளது. திடீரென்று Brandon காரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து Bianca-வின் தொண்டையில் பலமாக குத்தியுள்ளான். இதனால் Bianca-வின் தலை கிட்டத்தட்ட உடலில் இருந்து தனியாக வெளியே வந்துவிட்டது.

  இதற்கிடையில் Bianca-வை காணவில்லை என்று காவல்துறையினர் நீண்ட நேரமாக தேடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு Brandon போன் செய்துள்ளான்.

  பின்னர், ” நான்தான் Brandon Clark. நான் எனது காதலியை கொன்று விட்டேன். நீங்கள் என்னை பார்க்க வரும்போது என்னுடைய உயிரற்ற உடல் தான் கிடைக்கும்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளான்.

  இந்த அழைப்பை டிரேஸ் செய்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு Bianca கழுத்து அறுபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அவருக்கு பக்கத்திலேயே Brandon ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளான்.

  Bianca Devins - 2

  காவல்துறையினர் உடனடியாக Brandon-ஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் அவன் பிழைத்துக் கொண்டான். இந்நிலையில் நேற்று முன்தினம் Brandon-க்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

  குறைந்தது 25 வருடமாவது Brandon சிறையில் நாட்களை கழிக்க வேண்டியிருக்கும். மேலும் Bianca கழுத்தறுப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கும் காட்சிகளை Brandon இணையத்தில் பதிவேற்றியுள்ளான்.

  இந்த பதிவு இணைய பயனர்களால் மிக வேகமாக பகிரப்பட்டது. இதனால் காவல்துறையினர் பயனர்களிடம் Bianca இறந்து கிடக்கும் படங்களை பகிராதீர்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »