Home சற்றுமுன் அதொன்றும் தவறில்லை.. மியாகலிபாவுக்கு ஆதரவாய் பார்வதி!

அதொன்றும் தவறில்லை.. மியாகலிபாவுக்கு ஆதரவாய் பார்வதி!

ஓரினச் சேர்க்கையாளர்களை ஆசீர்வதிக்க மறுத்ததாக போப் ஆண்டவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மியா காஃலிபா டிவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு ஆதரவாக தமிழ் யூடியூப் பிரபலமும் நடிகையுமான விஜே பார்வதி கருத்துப் பதிவிட்டிருக்கிறார்.

ஹோமோசெக்ஸுவலாக இருப்பது நார்மல்தான். இதற்கு எதிராக வெளிப்படையாகப் பேசுங்கள் என்று விஜே பார்வதி கூறியிருந்தார். மேலும், `இயேசு கிறிஸ்து ஓரினச் சேர்க்கை பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிட்டதில்லை. ஓரினச் சேர்க்கையாளர்களுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அவர் சொல்லவில்லை என்று கூறிய ஜிம்மி கார்ட்டரின் கருத்தை இன்ஸ்டா போஸ்டில் மேற்கோள் காட்டியிருந்தார்.

காதலுக்கு எந்த பாலினமும் இல்லை. ஓரினச் சேர்க்கையாளர்களின் அன்பையும் புரிந்துகொள்ள முயற்சிப்போம்” என்று பதிவிட்டிருக்கிறார். அவரின் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.

ஏற்கனவே ரசிகர் ஒருவர் நீங்கள் மியா காலிஃபா மாதிரியே இருக்கிறீர்களே என்று கேட்டதற்கு,`எந்த ஆங்கிளில் பார்த்தாலும் நான் அப்படி இல்லையே. ஒருவேளை கண்ணாடி போட்டிருப்பதால் அப்படி தெரிகிறது போல…’ என செம கூலாகப் பதில் கொடுத்திருந்தார் விஜே பார்வதி.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version