Home உள்ளூர் செய்திகள் அதிமுக வில் எம்ஜிஆர் பேரன்! இளைஞர் அணிதுணை செயலராக நியமனம்!

அதிமுக வில் எம்ஜிஆர் பேரன்! இளைஞர் அணிதுணை செயலராக நியமனம்!

சட்டப் பேரவைத் தோதலில் அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்புக் கேட்ட எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரனுக்கு, கட்சியில் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவா் எம்.ஜி.ஆா்., இளைஞரணி துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மறைந்த முதல்வா் எம்.ஜி.ஆரின் மனைவியான வி.என்.ஜானகியின் சகோதரருக்கு 4 பெண் குழந்தைகள் இருந்தனரீ. லதா, கீதா, சுதா, பானு ஆகிய அந்த நால்வரையும் வளா்ப்புக் குழந்தைகளாக எம்.ஜி.ஆா். வளா்த்து வந்தார். அவா்களில் சுதாவின் கணவர் கே.விஜயகுமாா் என்ற விஜயன். அவர் 2008-ஆம் ஆண்டு சென்னை
நந்தனத்தில் சிலரால் அடித்துக் கொல்லப்பட்டார். விஜயனின் இரண்டாவது மகன் வி.ராமச்சந்திரன்.

பொறியியல் பட்டதாரியான அவா், ஆஸ்திரேலியாவில் பட்ட மேற்படிப்பு படித்தார்.

எம்.ஜி.ஆா்., போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆலந்தூர், பல்லாவரம், ஆண்டிபட்டி ஆகிய 3 தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு கேட்டு அவரது பேரன் ராமச்சந்திரன் விருப்ப மனு அளித்திருந்தார்.

அப்போது செய்தியாளா்களைச் சந்தித்த அவர், கொரோனா நோய்த் தொற்று காலத்திலேயே ஆண்டிபட்டி தொகுதியில் ஏராளமான நல உதவிகளை வழங்கியுள்ளேன். சுமாா் 60 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவிகளைச் செய்துள்ள தனக்கு ஆண்டிபட்டி அல்லது ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார்.

பேரவைத் தோதலில் போட்டியிட விருப்ப மனு அளித்த வி.ராமச்சந்திரனுக்கு, அதிமுக வெளியிட்ட அதிகாரப்பூா்வ வேட்பாளா் பட்டியலில் இடம் அளிக்கப்படவில்லை. ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட ஏ.லோகிராஜனுக்கும், ஆலந்தூா் தொகுதியில் போட்டியிட பி.வளா்மதிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராமச்சந்திரனுக்கு அதிமுகவில் தற்போது கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆா்., இளைஞரணி துணைச் செயலாளா் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சென்னை ராமாபுரத்தில் எம்.ஜி.ஆா்., வாழ்ந்த இல்லத்தில் மட்டுமே இதுவரை வசித்து வரும் ராமச்சந்திரன், இனி அதிமுகவின் அலுவலகத்திலும் கால் பதிக்கவுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version