ஏப்ரல் 10, 2021, 5:36 மணி சனிக்கிழமை
More

  ‌பந்தம் என்பது யாருக்கு? ஆச்சாரியாள் பதில்!

  abinav vidhya theerthar 1 - 2

  சிஷ்யர்:
  பந்தம் உண்மையாகவே இருக்கிறதா?

  ஆச்சார்யாள்:
  இல்லை அது உண்மையாக இருந்திருந்தால் ஞானோதயம் ஆன பிறகு அது எவ்வாறு இல்லாமல் போக முடியும்?

  சிஷ்யர்:
  யாருக்கு பந்தம் இருக்கிறது?

  ஆச்சாரியாள்:
  எவன் தனக்கு பந்தம் இருக்கிறது என்று கருதுகிறானோ அவனுக்கு பந்தம் இருக்கிறது.

  சிஷ்யர்:
  எவன் தனக்குப் பந்தமிருக்கிறது எனக் கருதுகிறான்? அதாவது தனக்கு உண்டு என்ற கருத்து யாருக்கு இருக்கிறது?

  ஆச்சாரியாள்: நீயே கூறு

  சிஷ்யர்:
  ஆன்மாவிற்கு தான் வருகிறது ஆச்சாரியாள் ஆத்மா சச்சிதானந்த வடிவமாக இருக்கிறது. அதற்கு ஒரு விதமான பந்தமோ அல்லது கட்டுப்பாடோ கிடையாது‌. இதுதான் சாஸ்திரங்களின் தீர்மானம். அது மனதிற்கும் அப்பாற்பட்டது. சிஷ்யர்: ஆத்மாவிற்கு பந்தம் சேராது என்றால் மனதிற்குத் தானே பந்தம் இருக்க வேண்டும்.

  ஆச்சாரியாள்:
  மனம் ஜடமான பொருள் அதற்கு எப்படி பந்தம் இருக்க முடியும்? ஜடமான பொருளுக்கு பந்தம் இருப்பது ஸாத்தியம் இல்லையே.

  சிஷ்யர்;
  பந்தம் ஆத்மாவிற்கும் இல்லை மனதிற்கும் இல்லை என்றால் பந்தம் என்பது எப்படித் தான் இருக்க முடியும்? ஆச்சாரியாள்: எல்லாவிதமான கோஷ்டிகளையும் நீ யோசித்துப் பார்த்தாயா?

  சிஷ்யர்:
  எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்துவிட்டேன். ஆத்மாவும் மனமும் சேர்ந்த ஒரு கோஷ்டியைப் பற்றித்தான் யோசிக்க வில்லை. ஆனால் அதுவும் பொருத்தம் இல்லையே.

  ஆச்சாரியாள்:ஏன்

  சிஷ்யர்:
  ஏனென்றால் ஆத்மாவின் குணம் வேறு மனதின் குணம் வேறு. இவை எப்படி சேர்ந்திருக்க முடியும்?

  ஆச்சாரியாள்: சூடும் ஒளியும் இரும்பின் குணங்களா?

  சிஷ்யர்: இல்லையே

  ஆச்சாரியாள்: அவை நெருப்பின் குணங்களா?

  சிஷ்யர்: ஆம்

  ஆச்சாரியாள்:
  ஓர் இரும்புத் துண்டை நீண்டகாலம் நெருப்பில் சுட வைத்தால் என்ன ஆகும்?

  சிஷ்யர்: இரும்புத்துண்டு வெண்மையான பளபளப்புடன் தோன்றி ஒளிவீசும். ஏனென்றால் அதற்கு அதிகமாக சூடு இருக்கும்‌

  ஆச்சாரியாள்:
  அதுசரி ஒளியும் சூடும் நெருப்பின் குணங்கள் என்று உனக்கு முன்பே தெரியவில்லை என்றால் நீ இவைகள் சுடவைத்த இரும்பில் தெரிவதால் அதனுடைய குணங்கள் என்று தானே கருதவாய்.

  சிஷ்யர்: ஆமாம்

  ஆச்சாரியாள்:
  அதேபோல் மனம் ஜடமாய் இருக்கிறது ஆத்மா சைதன்ய வடிவமாய் இருக்கிறது ஆத்மாவின் ஒளியால் மனம் ஜடம் இல்லாததை போல் தெரிகிறது. மனதினுடையதும் ஆத்மாவினுடையதுமான சேர்க்கையான ஜீவனுக்கு தான் பந்தம். இது ஆத்மாவுக்கு மட்டும் என்றோ மனதிற்கு மட்டும் என்றோ மனதிற்கு மட்டும் என்றோ இல்லை. இச்சேர்க்கைக்கு தான் ஜீவன் என்ற பெயர் . உண்மையில் ஜீவன் என்னவென்றால் ஆத்மாதான் எதுவரையிலும் ஜீவன் தன் உண்மையான சொரூபத்தை மறந்துவிடுகிறானோ அதுவரையிலும் பந்தத்தை அனுபவிக்கிறான். எப்போது ஜீவன் தான் உண்மையான சொரூபத்தை அறிந்து கொள்கிறானோ அப்போது மறு பிறவியில் இருந்து விடுதலை பெறுகிறான்.

  சிஷ்யர்:
  இதைப்போல் ஜீவன் முக்தியை அடைகிறான் என்றால் முக்தி எப்போதும் இருக்க முடியாது ஏனென்றால் எதற்கு ஆரம்பம் இருக்கிறதோ அதற்கு முடிவும் இருக்க வேண்டும். ஆகவே மோட்சம் அடைந்தாலும் அதற்கு முடிவு இருக்க வேண்டுமே?

  ஆச்சார்யாள்: ஏன்

  சிஷ்யர்: ஏனென்றால் ஆரம்பம் எதிர்ப்பு உள்ளதோ அதற்கு முடிவும் இருக்கவேண்டுமே?

  ஆச்சாரியாள்:
  நீ இவ்விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் பந்தம் என்பது உண்மையானது ஒன்றும் இல்லை. அது அறியாமையால் தான் ஏற்படுகிறது. எப்போது அது போய் விடுகிறதோ அப்போது ஆத்மா தன் பிரகாசத்துடன் பிரகாசிக்கிறது. ஆதலால் உண்மையான பந்தம் என்பது இல்லாததால் இந்த எதிர்ப்பு சரியாகாது. ஏனென்றால் இங்கு மோட்சம் என்பதை சொரூபத்தை தெரிந்து கொண்டு அறியாமை போக்கிக் கொள்வது தான். ஆத்மாவிற்கு பதிலாக ஒன்றை உண்டாக்கி அதை நாம் மோட்சம் என்று கூறுவதில்லை. ‌

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  sixteen + 3 =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,104FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »