ஏப்ரல் 22, 2021, 1:54 காலை வியாழக்கிழமை
More

  ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு!

  ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் எனப்படும் ஆர்எஸ்எஸ்., அமைப்புக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

  RSS New team

  ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் எனப்படும் ஆர்எஸ்எஸ்., அமைப்புக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். புதிய பொதுச் செயலாளராக தத்தாத்ரேயா ஹோசபலே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  ஆர்எஸ்எஸ்., அமைப்பின் அகில பாரதீய பிரதிநிதிகள் சபைக் கூட்டம் பெங்களூருல் நடைபெற்று வருகிறது. இந்த அமைப்பின் கூட்டம், இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ள மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெறும். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக பெங்களூருல் நடைபெற்று வருகிறது.

  ஆர்எஸ்எஸ்., அமைப்பின் பொதுச்செயலாளர் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுவார். தற்போது இதன் பொதுச் செயலாளராக சுரேஷ் பையாஜி ஜோஷி உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இவர் இந்தப் பதவியில் உள்ளார். அவரது மூன்றாண்டு பதவிக் காலம் நிறைவு பெற்றதை அடுத்து, புதிய பொதுச் செயலாளராக தத்தாத்ரேயா ஹோசபலே தேர்வு செய்யப்பட்டார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பில் இருந்து பணி செய்வார்.

  hosabale - 1

  கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள சோரப் பகுதியில் பிறந்தவர் தத்தாத்ரேயா ஹோசாபலே. இவரது பெற்றோரும் ஆர்எஸ்எஸ்., அமைப்பில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

  தத்தாத்ரேயா, 1968ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ்., அமைப்பில் இணைந்தார். பின்னர் 1972ஆம் ஆண்டு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்(ஏபிவிபி) மாணவர் அமைப்பில் இணைந்து, அதன் பொதுச் செயலராக 15 ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்.

  #தத்தாத்ரேய_ஹோசபலே #கர்நாடகம் ஷிமோகாவை சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே #ஸ்வயம்சேவக். கல்லூரியில் எம்.ஏ. படித்துக்கொண்டிருந்த போது நெருக்கடிநிலை (1975) காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். 1978 முதல் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் முழுநேரத் தொண்டராக பணியாற்றியவர். கர்நாடக மாநில #எபிவிபி.அமைப்பு செயலாளர், தென் பாரத அமைப்பு செயலாளர், அகில பாரத இணை அமைப்பு செயலாளர் இறுதியில் அகில பாரத அமைப்பு செயலாளராக சிறந்த பணியாற்றியவர். பின்னர் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத சஹ பௌதிக் பிரமுக், தொடர்ந்து அகில பாரத சஹ சர்கார்யவாஹ் பொறுப்பு 2009இல் இருந்து நாடெங்கிலும் சுற்றுப்பயணம் செய்து கார்யகர்த்தர்களுக்கு வழிகாட்டியுவர். தற்போது அகில பாரத சர்கார்யவாஹ் ஆக பொறுப்பு ஏற்றுள்ளார்… என்று இந்தத் தேர்வு குறித்து தகவல் வெளியிட்ட அந்த அமைப்பின் ஊடகப் பிரிவு விஸ்வ சம்வாத் கேந்திரா குறிப்பிட்டுள்ளது.

  புதிய பொறுப்பினை ஏற்ற பின்னர் தத்தாத்ரேயா ஹோசபலே அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஆர்எஸ்எஸ் அமைப்பின் இலக்கு என்பது குறித்துக் குறிப்பிட்ட போது, பசுப் பாதுகாப்பு, குடும்ப கவுன்சிலிங், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக அநீதியை அகற்றுதல், கிராமப்புற வளர்ச்சி ஆகியவை ஆர்எஸ்எஸ்., அமைப்பின் இலக்குகளாக இருக்கும் என்றார்.

  ஆர்.எஸ்.எஸ்., புதிய பொறுப்பாளர்கள்:

  ப.பூ.சர்சங்கசாலக் (தலைவர்)
  டாக்டர். மோகன் பாகவாத்

  சர்கார்யவாஹ்: (பொதுசெயலாளர்)
  திரு. தத்தாத்ரேயா ஹொசபலே

  இணை பொது செயலாளர்கள்:
  1) டாக்டர் க்ருஷ்ண கோபால்
  2) டாக்டர் மன் மோகன் வைத்யா
  3) சி.ஆர்.முகுந்தா
  4) அருண் குமார்
  5) ஸ்ரீராம் தத் சக்ரதார்

  ஷாரீரிக் விபாக் (உடற்பயிற்சி பிரிவு பொறுப்பாளர்)
  1) சுனில் குல்கர்னி – ப்ரமுக்
  2) ஜெகதீஷ் பிரசாத் – சஹ ப்ரமுக்

  பௌதிக் விபாக்:
  1) ஸ்வாத் ரஞ்சன் – ப்ரமுக்
  2) சுனில்பாய் மேத்தா – சஹப்ரமுக்

  சேவா விபாக்:
  1) பராக் அப்யங்கர் – ப்ரமுக்
  2) ராஜ்குமார் மத்தாலே- சஹப்ரமுக்

  சம்பர்க்க விபாக்:
  1) ராம் லால் – ப்ரமுக்
  2) ரமேஷ் பாப்பா – சஹ ப்ரமுக்
  3) சுனில் தேஷ்பாண்டே –
  சஹப்ரமுக்

  ப்ரசார் விபாக்:
  1) சுனில் அம்பேகர் – ப்ரமுக்
  2) நரேந்திர தாகூர் – சஹ ப்ரமுக்
  3) அலோக் குமார் – சஹ ப்ரமுக்

  அகில பாரத செயற்குழு உறுப்பினர்கள்:
  1) சுரேஷ் பையாஜி ஜோஷி
  2) சுரேஷ் சோனி
  3) வி.பாகையா
  4) சுஹாஸ் ராவ் ஹீரேமத்
  5) இந்தரேஷ் குமார்
  6) பேரா.அனிருத் தேஷ் பாண்டே
  7) ராம் மாதவ்
  8) உல்லாஸ் குல்கர்னி
  9) காஜம்பாடி சுப்ரமணிய பட்


  rss karyakari mandal - 2

  #பெங்களூருவில் மார்ச் 19 அன்று நடைபெற்ற  #ஆர்எஸ்எஸ்  அகில பாரதீய பிரதிநிதி சபை துவக்க நிகழ்ச்சியின்போது சங்கத்தின் அகில பாரத இணை பொது செயலாளர் டாக்டர் மன்மோகன் வைத்திய செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்த கருத்து. உடன் அகில பாரத செய்தி தொடர்பாளர் ஸ்ரீ அருண்குமார் ஜி.

  #அயோத்தி#ராமர்_கோயில் கட்டுவதற்கான நிதி சமர்ப்பண விழிப்புணர்வு மக்கள் தொடர்பு இயக்கத்தின் போது 5 லட்சத்து 45 ஆயிரத்து 737 ஊர்களில் 20 லட்சம் ஆர்எஸ்எஸ் அன்பர்கள் 12 கோடியே, 47 லட்சத்து, 21,000 பேர்களை சந்தித்தார்கள். மிக நல்ல வரவேற்பு இருந்தது. அது மட்டுமல்ல நாடு முழுவதும் ஒன்றுபட்டு நின்ற காட்சியை காண முடிந்தது.

  #குரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஐந்து லட்சத்து 70 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ் #ஸ்வயம்சேவகர்கள் நாடு முழுவதும் 92,656 ஊர்களில் மக்களுக்கு சேவை செய்தார்கள். 73 லட்சம் பேருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன 4.5 கோடி பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. விநியோகிக்கப்பட்ட முகக் கவசங்கள் 90 லட்சம். 60,000 யூனிட் ரத்தம் தானம் செய்யப்பட்டது. 20 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஸ்வயம்சேவகர்கள் உதவி செய்தார்கள். இந்த காலகட்டத்தில் 2.5 லட்சம் வீடற்ற மக்களை சங்க அன்பர்கள் காப்பாற்றினார்கள்.

  ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாமல் வேறு பல அமைப்புகளும் இயக்கங்களும் மக்களுக்கு தாமாகவே முன்வந்து உதவியதை பார்க்க முடிந்தது. அதாவது பாரத நாட்டில் மக்களுக்காக மக்களே சேவை செய்வது என்பதுதான் ஊரடங்கும் போது நடைபெற்றிருக்கிறது.

  உலகில் எந்த ஒரு நாட்டிலும் அரசு இருக்கும், நிர்வாக இயந்திரம் இருக்கும். அவர்கள் மக்களுக்கு இது போன்ற தருணங்களில் உதவி செய்வார்கள். பாரத நாட்டில் தான் மக்களே இதுபோல மக்களுக்கு உதவி செய்யும் அரிய காட்சி காணக் கிடைக்கிறது. ஏனென்றால் பாரதத்தில் அரசு பீடம் அல்லாத சுயம் பிரகாசமான #ராஷ்டிரம் என்ற கருத்து நிலவுகிறது. அதற்கு அத்தாட்சி இதுதான்.

  கொரோனா 2020 மார்ச் முதல் ஜூன் வரை #ஷாகா பணி நின்றது. ஜூலை முதல் மெல்ல மெல்ல மறுபடியும் #ஷாகாக்கள் நடைபெறத் தொடங்கின. தற்போது 89 சதவீத ஷாகாக்கள் இயங்கத் தொடங்கிவிட்டன. மற்றவையும் மெல்லமெல்ல செயல்பட தொடங்கும்.
  இன்று பாரத நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ் பணி நடைபெறுகிறது. 6,495 தாலுக்கா / கண்ட பகுதிகளில் ஷாகா நடைபெறுகிறது. 85 சதவீத கண்ட பகுதிகளில் முழுவீச்சில் மீண்டும் ஷாகா நடைபெறத் தொடங்கிவிட்டது.
  தாலுகா நிலைக்கு கீழே 10 12 மாவட்டங்கள் கொண்டது தொகுப்பு மண்டல் எனப்படுகிறது. தேசத்தில் இப்படிப்பட்ட 58 ஆயிரத்து 500 மண்டல் கள் உள்ளன. இவற்றில் 40% மண்டல்களில் ஷாகா நடக்கிறது. 20% மண்டல் களில் தொடர்பு உள்ளது. 60% மண்டல் களில் ஷாகா பணி அல்லது தொடர்பு உள்ளது. சங்க பணியின் வலைப்பின்னல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தேசத்தின் எல்லா மண்டல்களழும் ஷாகா சென்றடைய சங்கம் இலக்கு வைத்துள்ளது

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »