ஏப்ரல் 20, 2021, 3:16 மணி செவ்வாய்க்கிழமை
More

  அந்தரங்க வீடியோவை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்! புகாரளித்த மனைவி!

  Pornography
  Pornography

  சென்னையில் தாம்பரம் அடுத்துள்ள சானிட்டோரியத்தில் 40 வருடங்களுக்கு மேலாக தோல் வியாபாரம் செய்து வரும் பீகாரைச் சேர்ந்த வியாபாரியின் இரண்டாவது மகனான சபீக் அகமது இவர் மென்பொறியாளர் ஆக உள்ளார்.

  இவருக்கு ஏற்கனவே இரு திருமணங்கள் நடந்து விவாகரத்து ஆன நிலையில் மூன்றாவதாக ஆஸ்திரேலியா குடியுரிமை வாங்கிய ஹைத்ராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சாதி.காம் மூலம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

  sabik akamed - 1

  சபீக்கிற்கு மனைவியுடனான அந்தரங்க உறவை வீடியோ எடுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் லாக்டவுனில் வீட்டிலிருந்த பொழுது கர்ப்பமாய் இருந்த தனது மூன்றாவது மனைவியின் கர்ப்பத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கலைத்து உள்ளார். இதனால் அந்த பெண் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

  தாய் வீட்டிற்கு சென்ற தன் மனைவியை தன்னுடன் வந்து வாழுமாறு மிரட்டியுள்ளார் சபீக் அகமது. அவ்வாறு தன்னுடன் வந்து வாழ மறுத்தால் தன்னிடம் உள்ள தங்களது அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவேன் என மிரட்டி உள்ளார். அதோடு இல்லாமல் ஸ்டேட்டஸில் அந்த வீடியோவை வைத்து மனைவியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்த அவரது மனைவி சென்னை பெருநகர காவல்ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

  இந்நிலையில் அவரை கைது செய்த பொழுது அவருடைய செல்போனைக் கைப்பற்றி ஆராய்ந்த பொழுது செல்போனில் முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளின் வீடியோக்களும் இருந்துள்ளது.

  சென்னை சைபர் கிரைம் மூலமாக இவருடைய செல்போனை ஆய்வு செய்யும் பொழுது 100க்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோக்களும் புகைப்படங்களும் சிக்கின.

  இவருக்கு இது ஒரு பழக்கமாகவே இருந்திருக்கிறது. இவர் முதலில்
  கான்பூரை சேர்ந்த பெண்ணை shaadi.com மூலம் திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்தப் பெண்ணும் பிரிந்து செல்லும் பொழுது இதேபோல் மிரட்டியுள்ளார். அவரும் கான்பூர் காவல்நிலையத்தில் சபீக் குறித்து புகார் அளித்துள்ளார்.

  sabik agamed - 2

  இரண்டாவதாக பெங்களூரைச் சேர்ந்த பெண்ணை அவரது முறைப்படி கல்யாணம் செய்து அவரிடம் இதே வேலையை காட்டியுள்ளான். அவரும் பிரிந்து செல்லும் பொழுது பெங்களூர் காவல் நிலையத்தில் இவரைப் பற்றி புகார் அளித்துள்ளார். இறுதியில் தற்பொழுது சென்னை போலீசில் சிக்கியுள்ளார். இப்பொழுது இவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

  பெண்கள் தன் கணவனாக இருந்தாலும் தாம்பத்தியத்தை வீடியோ எடுப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. அதை அழித்து விட்டால் கூட செல்போனை பழுது பார்க்கும் கடையில் கொடுக்கும் பொழுது அவர்கள் இந்த வீடியோவை எடுத்து தவறாகப் பயன்படுத்தக்கூடும். அதனால் இதனை எப்பொழுதும் பெண்கள் அனுமதிக்கக்கூடாது என சைபர் கிரைம் எச்சரிக்கின்றனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,116FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »