ஏப்ரல் 18, 2021, 11:08 காலை ஞாயிற்றுக்கிழமை
More

  தெலுங்கானாவில் ஸ்டேடியம் இடிந்து விழுந்து 100 பேர் காயம்!

  Stadium - 1

  தெலுங்கானாவில் உள்ள சூர்யாபேட் நகரத்தில் தேசிய ஜூனியர் கபடி போட்டி நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பார்வையாளர்கள் அமர்ந்திருந்த மாடம் இடிந்து விழுந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூர்யாபேட் நகரத்தில் 47வது தேசிய அளவிலான கபடி போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிகளை தெலுங்கானா மாநில கபடி அசோசியேன் மற்றும் சூர்யாபேட் மாவட்ட கபடி அசோசியேன் ஆகியவை இணைந்து நடத்தின.

  thelunkana - 2

  இந்த கபடி போட்டி தொடரை தெலுங்கானா மாநில மின்சார துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி, சூர்யாபேட்டில் உள்ள காவலர்கள் மைதானத்தில் தொடங்கி வைத்தார்.

  தெலுங்கானா மாநில விளையாட்டு துறை அமைச்சர் சீனிவாச கௌடா இன்று விளையாட்டு போட்டி நடந்த போது அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

  Stadium1 - 3

  இந்த விளையாட்டு போட்டியை காண 5000க்கும் மேற்பட்டோர் மைதானத்தின் கேலரியில் அமர்ந்திருந்தனர். அதிகப்படியான கூடடத்தினர் அமரந்திருந்ததால் அதிக பாரம் தாங்காமல் கேலரி இடிந்து சரிந்தது. இதனால் இடிபாடுகளில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் அதிகப்படியான கூட்டமே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது என்றார்.

  காயம் அடைந்த அனைவரும் சூர்யாபேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 20க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  உள்ளூர் செய்தியாளர்கள் நிலைமை குறித்து கூறுகையில், மைதானத்தில் மரத்தாலான பலகைகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் மூன்று வெவ்வேறு கேலரிகள் கட்டப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் 20 அடி உயரத்திலும் 240 அடி அகலத்திலும் இருந்தன. ஒவ்வொரு கேலரியிலும் மொத்த கொள்ளளவு 1500 ஆகும். இருப்பினும், அதிகப்படியான மக்கள் இருந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. பார்வையாளர்கள் கேலரியை அதன் திறனை விட அதிகமாக ஆக்கிரமித்தததால் அது திடீரென சரிந்து விழுந்தது. என்று கூறினார்கள்.

  தெலுங்கானாவில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கபடி போட்டி தொடரில் 29 மாநிலங்களைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நான்கு நாட்கள் -நாக் அவுட் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட இருந்தன.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,229FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,110FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »