Home உள்ளூர் செய்திகள் தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இயங்கும்: சங்க செயலாளர் அறிவிப்பு!

தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இயங்கும்: சங்க செயலாளர் அறிவிப்பு!

private bus

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர பிற இடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து, பாதிப்பு அதிகரித்தாலும் 5ம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன் அரசு பேருந்துகள் இயங்கவும் அரசு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், தனியார் பேருந்துகள் இயக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் தனியார் பேருந்துகள் ஓடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களில் தனியார் பேருந்துகள் இயங்கும்.

குறிப்பிட்ட மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் அரசின் விதிகளை பின்பற்றி 4,400 தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். மொத்த இருக்கைகளில் 60 சதவீதம் பயணிகளை ஏற்றிச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு விதிமுறையின்படி மண்டலம் விட்டு மண்டலம் இயக்க அனுமதி இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version