ஏப்ரல் 20, 2021, 9:17 காலை செவ்வாய்க்கிழமை
More

  அகதிகளாக இந்தியாவில் வாழ்கிறோம்: பாகிஸ்தான் அஹமதியான் முஸ்லிம்கள் பிரதமருக்கு கோரிக்கை கடிதம்!

  muslim - 1

  முஸ்லிம்களில் ஷியா, சன்னி பிரிவுகள் அல்லாமல் அஹமதியான் என்ற ஒரு பிரிவும் உள்ளது. இப்பிரிவினரை தம் மதத்தவர் என உலக முஸ்லிம்கள் ஏற்பதில்லை. இதற்கு முஸ்லிம்களின் மதக்கோட்பாடுகளில் அஹமதியான்களுக்கு வேறு வகையான கொள்கை உள்ளிட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக உள்ளன.

  இதன் அடிப்படையிலேயே பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டம் காதியானில் 1835-ல் பிறந்த மிர்சா குலாம் அகமது என்பவர் அஹமதியான் பிரிவை உருவாக்கினார். இவர்கள் தனி மசூதிகளில் தொழுகை நடத்துகின்றனர்.

  இதுபோன்ற காரணங்களால், முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் அஹமதி பிரிவினரை 1974-ல் சட்டம் இயற்றி ‘முஸ்லிம் அல்லாதவர்கள்’ எனக் குறிப்பிடுகின்றனர்.

  இவர்கள் மற்ற பிரிவு முஸ்லிம்களை இஸ்லாத்தின் முறைப்படி ‘அஸ்ஸலாம் அலைக்கும்’ எனக்கூறி வணங்குவதும் தண்டனைக்குரியக் குற்றமாகக் கருதப்படுகிறது.

  பாகிஸ்தானில் அஹமதியான்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாகவும் கருதப்படுவதால் அவர்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாக வசிக்கின்றனர்.

  ஜெர்மனியில் அகதிகளாகத் தங்கியுள்ள அஹமதியான் முஸ்லிம்கள் 528 பேரை தற்போது நாட்டை விட்டு வெளியேறும்படி அந்நாட்டு அரசு கூறி வருகிறது. ஆனால், பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் தங்கி நாடு திரும்பியவர்களில் சிலர் வெளிநாடுகளின் உளவாளிகள் எனக் கருதி பாகிஸ்தானியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

  இதனால், அஹமதியான்கள் பாகிஸ்தானுக்கு திரும்பாமல் இந்தியாவில் அகதிகளாக வாழ விருப்பம் தெரிவித்து பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

  இதுகுறித்து ‘பஞ்சாபின் காதியானில் வாழும் அஹமதியான் முஸ்லிம்கள் கூறும்போது, ‘நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானிலும் அஹமதியான் பிரிவினரை வளர்க்கும் பொருட்டு எங்களில் ஒரு சில குடும்பத்தினர் இங்கிருந்து அனுப்பப்பட்டனர்.

  பாகிஸ்தானில் அவர்கள் பலவகை கொடுமைகளுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இந்தியாவில் பாகிஸ்தான் முஸ்லிம்கள் இந்திய பிரஜையாக முடியாது.

  எனவே அகதிகளாகவாவது இங்கு வாழ மத்திய அரசிடம் ஜெர்மனியிலுள்ள அஹமதியான் அகதிகள் கோரியுள்ளனர்’ என்று தெரிவித்தனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,115FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »