ஏப்ரல் 20, 2021, 3:21 மணி செவ்வாய்க்கிழமை
More

  பொய்ப் பிரசாரத்தின் மூலம் மக்களை பிளவுபடுத்தி எதிர்க்கட்சிகள் வாக்கு பெற முயற்சி: ஆர்.பி. உதயகுமார்!

  மக்களிடம் செல்வாக்கு பெறாதவர்கள் இதன் மூலம் பெற நினைக்கின்றனர் அது ஒருபோதும் நடக்காது

  udayakumar
  udayakumar

  மதுரை : பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் மக்களை பிளவுபடுத்தி எதிர்க்கட்சிகள் வாக்கு பெற முயற்சி என அமைச்சர் ஆர் பி.உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டி பேசினார்

  திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பொட்டிபுரம், சித்திரெட்டிபட்டி மீனாட்சிபுரம் சௌடார்பட்டி வலையபட்டி பூசலப்புரம் மதிப்பனூர் நாகையாபுரம் இடையபட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தீவிர வாக்கு சேகரித்தார் .
  அதனை தொடர்ந்து பொட்டிபுரத்தில் வாக்கு சேகரித்தபோது அங்கு கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்தது அப்போது கட்டிட தொழிலாளிக்கு உதவும் வண்ணம் தானும் கட்டிடத்திற்கு தண்ணீர் பைப்பு மூலம் அடித்தார்

  அதனைத் தொடர்ந்து அங்கு உள்ள வயதான பாட்டிமார்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி முதியோர் உதவி தொகை 2,000 உங்களுக்கு வழங்கப்படும் என்று கூறி இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்

  சித்திரெட்டிபட்டியில் கபசுரக் குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று அங்குள்ள பெண் பணியாளர்களிடம் வாக்கு சேகரித்து கபசுரக் குடிநீர் தயாரிக்கும் பணிகளுக்கு உதவி செய்தார் அதனை தொடந்து செளவுடார்பட்டி கிராமத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் அமைச்சர்ஆர்.பி உதயகுமார் பேசியதாவது:

  இன்றைக்கு எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய் பிரசாரங்களை செய்து வருகின்றனர். சட்டமன்றத்தில் தற்காலியமான மசோதா தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

  68 சமுதாயத்திற்கு 7.5 இட ஒதுக்கீடு என்றும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு 10.5 இட ஒதுக்கீடு என்றும், இதர சமுதாயத்திற்கு 2.5 இட ஒதுக்கீடு என்றும் கூறி வருகின்றனர் அது உண்மை அல்ல மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

  மக்களிடம் செல்வாக்கு பெறாதவர்கள் இதன் மூலம் பெற நினைக்கின்றனர் அது ஒருபோதும் நடக்காது

  டி.என்.டி என்ற நீண்ட நாள் கோரிக்கையானது ரயில்வே, ஐஐஎஸ், வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு, கல்வி தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் பெற்றிடும் வண்ணம் இந்த 45 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற வண்ணமும் டிஎன்டி சான்றிதழை பெற்று தந்த ஒரே அரசு அம்மாவின் அரசு ஆகும் அதை வழங்கியவர் முதல்வரும் துணை முதல்வரும் ஆவர்!

  திமுக ஆட்சியில் இருந்தபோது மக்கள் மீது அன்பு இருந்தால் 68 சமுதாய மக்களின் கோரிக்கையான டி.என்.டியை நிறைவேற்றி தந்திருக்கலாமே!

  அதிமுக செல்வாக்கை யாரும் குறைத்து நினைத்தால் அது பகல் கனவாகவே போய்விடும் 68 சமுதாய டி என் டி அங்கீகாரத்தை வழங்கி 50 ஆண்டு கால கனவை நனவாக்கியது இரட்டை இலை சின்னம்

  இதே திமுக ஆட்சி காலத்தில் 68 சமுதாய மக்கள் மீது வஞ்சித்து பொய் வழக்கு தொடுக்கப்பட்டது ஜாதி சண்டை தலைவிரித்தாடியது மீண்டும் பொய் பிரச்சாரம் செய்தால் தகுந்த பதிலடி கொடுப்போம்
  மக்களை பிளவு படுத்தி அதன் மூலம் வாக்குகள் வாங்க திமுக முயற்சி செய்கிறது அது ஒருபோதும் நடக்காது.

  நாமெல்லாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் நம்மைப் பிரிக்க முடியாது. இன்றைக்கு நமது முதலமைச்சர் 163 தேர்தல் திட்டங்களை அறிவித்து உள்ளனர் கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் அறிக்கைகளை 100% நிறைவேற்றித் தந்த அரசு அம்மா அரசு.

  நிச்சயம் உங்கள் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடியார் வருவார் வந்தவுடன் 163 திட்டங்களை உங்கள் இல்லம் நாடி நிச்சயம் நாங்கள் வழங்குவோம்

  ஆகவே இந்த தொகுதியில் போட்டியிடும் எனக்கு உங்கள் பொன்னான வாக்குகளை புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,116FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »