ஏப்ரல் 20, 2021, 8:49 காலை செவ்வாய்க்கிழமை
More

  பெண்களை இழிவு படுத்துவது எதிரணியின் கலாச்சாரம்: ஆ ராசா லியோனியின் பேச்சுக்கு பிரதமர் கண்டனம்!

  தமிழகத்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான தாராபுரத்திற்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி

  modi - 1

  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயை திமுக இழிவுபடுத்தியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான தாராபுரத்திற்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று மோடி தெரிவித்துள்ளார்.

  பெண்களை வலுப்படுத்தவே பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். வெற்றிவேல் வீரவேல் என தனது உரையை தாராபுரத்தில் பிரதமர் மோடி துவங்கினார்.

  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி , “தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது .

  எங்கள் நோக்கம் வளர்ச்சி; காங்கிரஸ் – திமுகவின் நோக்கம் குடும்ப அரசியல். நாட்டின் வளர்ச்சிதான் பாஜக தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் நோக்கம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயை திமுகஇழிவுப்படுத்தியுள்ளது.

  திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, பொல்லான், காலிங்கராயன் போன்றோரை கொடுத்த ஊர் இது என மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

  தமிழகத்தின் கலாசாரத்தால் ஒட்டுமொத்த இந்தியாவே பெருமை கொள்கிறது எனவும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்கிற முழக்கத்துடன் தான் நாங்கள் மக்களை சந்திக்கிறோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  தேவேந்திரகுல வேளாளர் எனும் அறிவிப்பை வெளியிட்டது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தான், இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்பாதை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

  தமிழகத்தின் பெண்களை இழிவுபடுத்தும் வேலையை தற்போது எதிரணியினர் இறங்கியுள்ளனர். திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசாவை 2ஜி ஏவுகணை என மறைமுகமாக குறிப்பிட்டு மோடி உரையார்றியுள்ளார்.

  பெண்களை இழிவு படுத்துவது என்பது திமுக மற்றும் காங்கிரசின் கலாச்சாரம் எனவும் பெண்களை அவமதித்த திண்டுக்கல் லியோனி மீது திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மோடி குற்றம்சாட்டியுள்ளார். திமுக பட்டத்து இளவரசருக்காக அக்கட்சியில் முக்கிய தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். காங்கிரசும் திமுகவும் முதல்வரின் தாயை அவமதித்துள்ளனர்.

  தரமான பொம்மைகளை தயாரிக்கும் மையம் தமிழகத்தில் அமைய உள்ளது; இதன்மூலம், உலக அரங்கில் தரமான பொம்மைகளை தயாரிக்கும் மையமாக தமிழகம் இருக்கும்.

  தமிழகசட்டசபைத்தேர்தல்2021 மக்கள் இந்தியாவுக்கு என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர். தமிழ் மொழியில் தொழில்நுட்ப கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆண்டாள் , ஒளவையாரின் உத்வேகங்களை பெற்றுள்ளது.

  தமிழகத்தின் கலாசாரத்தால் ஒட்டுமொத்த இந்தியாவே பெருமை கொள்கிறது எனவும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்கிற முழக்கத்துடன் தான் நாங்கள் மக்களை சந்திக்கிறோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,115FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »