ஏப்ரல் 22, 2021, 1:02 காலை வியாழக்கிழமை
More

  மூளையில் துளைத்த நாடாப்புழு! வலிப்பு நோயால் அவதியுற்ற சிறுவன்! அரிதான ஆபரேஷன்!

  ஆபரேஷன் மூலம் குணப்படுத்திய நியூரோ சர்ஜன் ஹனுமா ஸ்ரீநிவாஸ் ரெட்டி.

  IMG 20210325 WA0014 - 1

  நாடாப்புழு மூளையில் துளைத்துக் கொண்டு சென்றதால் வந்த வினை.

  10 வயது சிறுவனுக்கு அரிதான அறுவை சிகிச்சை.

  ஆபரேஷன் மூலம் குணப்படுத்திய நியூரோ சர்ஜன் ஹனுமா ஸ்ரீநிவாஸ் ரெட்டி.

  கடந்த 5 ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு தினமும் வலது கையை இழுத்தபடி இருந்த 10 வயது சிறுவனுக்கு குண்டூரைச் சேர்ந்த நியூரோ சர்ஜன் டாக்டர் பவனம் ஹனும சீனிவாச ரெட்டி மிகவும் அரியதான அறுவை சிகிச்சை செய்து நோயைக் குணப்படுத்தினார்.

  ஆபரேஷன் விவரங்களை புதன்கிழமையன்று குண்டூரில் அவர் மீடியாவுக்கு தெரிவித்தார்.

  பிரகாசம் மாவட்டம் இங்கொல்லுவைச் சேர்ந்த புருசு வீர்ராஜு, மகேஸ்வரி தம்பதிகளின் 10 வயது சிறுவன் மகேஷ். 2015-ல் இருந்து ஃபிட்ஸ் நோயால் சிரமப்பட்டு வந்தான். எவ்வளவு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் குணமாகவில்லை.

  கடந்த மாதம் 15 ஆம் தேதி இரவு உறங்கிய 8 மணி நேரம் தவிர நாள் முழுவதும் சிறுவனின் வலது கை நிற்காமல் இழுத்துக் கொண்டே இருந்தது. அதனால் சிறுவனின் பெற்றோர் அவனை குண்டூரு ஜிஹெச் அழைத்துச் சென்றார்கள். ப்ருந்தா நியூரோ சென்டருக்கு செல்லும்படி அங்கு ரெஃபர் செய்தார்கள். பிரெயின் சர்ஜரிகளுக்கு உபயோகப்படும் மிகவும் நவீன மருத்துவக் கருவி “நியூரோ நேவிகேஷன் டெக்னாலஜி அனிமேட்டட் 3டி ப்ரெய்ன் மூவ்” பயன்படுத்தி சிறுவனின் மூளையில் இருந்த கட்டியை இந்த மாதம் 17ஆம் தேதி டாக்டர் ஹனும ஸ்ரீநிவாஸ் ரெட்டி நீக்கினார். டாக்டர் த்ரிநாத் உதவி செய்தார்.

  ஆபரேஷன் செய்து வெளியில் எடுத்த டியூமரை பயாப்சி பரிசோதனை செய்தபோது ‘நியூரோ சிஸ்டி செர்கோஸிஸ் ஆஃப் பிரைன்’ என்று கண்டறிந்தாக டாக்டர் சீனிவாச ரெட்டி கூறினார்.

  இது ஒரு டேப் வேர்ம் எனப்படும் நாடாப்புழு மூலம் ஏற்படும் என்றும் பன்றி மாமிசம் தின்பவர்களோடு கூட காய்கறிகள் மற்றும் பழங்களை சரியாக கழுவாமல் தின்பவர்களுக்கும் நியூரோ சிஸ்டி செர்கோஸிஸ் முட்டைகளிலிருந்து இந்த டேப் புழுக்கள் வெளி வருவதால் இந்த பிரச்சினை ஏற்படுவதாக அவர் விவரித்தார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »