ஏப்ரல் 22, 2021, 7:54 காலை வியாழக்கிழமை
More

  நடிகர் சேதுராமனின் ஒரு வருட நிறைவு! கண்ணீர் வரச்செய்யும் மனைவியின் உருக்கமான பதிவு!

  Sethu raman - 1

  நடிகர் சேதுராமன் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், அவரது மனைவி உமா தன் கணவர் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

  ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். அதற்குப் பிறகு ‘வாலிப ராஜா’, ‘சக்கபோடு போடு ராஜா’ மற்றும் ’50/50′ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும், நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராகவும், திரையுலகினர் பலருக்குத் தோல் மருத்துவராகவும் இருந்தார்.

  கடந்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி சென்னையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மறைவு திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மனைவி உமையாள் என்கிற உமா.

  sethuraman uma - 2

  இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், மகன் இருக்கின்றனர். சேதுராமன் மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி அவரது மனைவி உமையாள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவர் குறித்து உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

  sethuraman family - 3

  “‘மா’ இப்படித்தான் நான் உங்களை என்றுமே அன்போடு அழைத்திருக்கிறேன். உங்கள் பெயரை வைத்து இதுவரை அழைத்ததே இல்லை. அது ஏனென்றால் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் உங்கள் மீது அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன்.

  எனது தினசரி வாழ்க்கை உங்களைச் சுற்றி, உங்களை மட்டுமே சுற்றி இருந்தது. உங்கள் சந்திப்புகளை/ பயணங்களை/ தினசரி நோயாளிகள் பட்டியலை/ உடற்பயிற்சி நேரத்தை/ உணவை/ ஓய்வைத் திட்டமிடுவேன்.

  4 வருடங்களில் உங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்திருக்கிறேன். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி மட்டுமே நினைத்திருக்கிறேன். அதை சாத்தியப்படுத்த என்னால் முடிந்த வகையில் சின்னசின்ன வழிகளில் உதவியிருக்கிறேன்.

  நீங்கள் கனவு காண்பதை நிறுத்தியதே இல்லை. உங்கள் கனவுகளை நனவாக்க சாத்தியப்படும்போது நான் வேண்டாம் என்று சொன்னதே இல்லை.

  உங்களுக்குக் கிடைக்க அரிதான ஒரு உதவியாளர் நான், அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டக்காரர் என்று பல முறை சிறுபிள்ளைத்தனமாக நாம் பேசியிருக்கிறோம். பணம் என்றுமே உங்களுக்கு முக்கியமாக இருந்ததில்லை. மகிழ்ச்சியும் அன்பு மட்டுமே முக்கியம்.

  உங்களுக்கு நெருக்கமானவர்கள் வருத்தமாக இருந்தால் உங்களால் உறங்க முடியாது. அதிகம் சிந்திக்கும், ஆர்வம் கொண்ட, ஆத்மார்த்தமான, குழந்தைத்தனமான, அப்பாவியான, முதிர்ந்த ஆன்மா நீங்கள். உங்களையும் உங்கள் குணங்களையும் யாராலும் பிரதி எடுக்க முடியாது.

  ஒரு வருடம் அதற்குள் முடிந்துவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. நீங்கள் கதவைத் தட்டுவீர்கள் என்று இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். தட்டுவீர்களா?

  வேதாந்தும், சஹானாவும் வளர்ந்து கதவைத் தட்டும் வரை நான் காத்திருப்பேன்.

  நீங்கள் தூரமாக இல்லை. எங்களால் கேட்க, பார்க்க முடியாத அளவு நெருக்கமாக இருக்கிறீர்கள்.

  அன்புடன்
  உமா சேதுராமன்”.

  இவ்வாறு அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »