ஏப்ரல் 18, 2021, 11:38 காலை ஞாயிற்றுக்கிழமை
More

  கள்ளக்காதலனுடன் சென்ற பெண்! வந்துவிடு.. கணவனும், குழந்தைகளும் கதறல்!

  lovers
  lovers

  கணவருக்கு வயது அதிகம் என கூறிவிட்டு இன்னொருவருடன் ஓடிய தாயை தேடி கதறும் குழந்தைகளை பார்த்த அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

  44 வயதான குமரவேல் என்ற நபர், திருச்சி மாவட்டம் எடமலைபட்டி புதூர் பகுதியில் இன்டீரியர் டெக்கரேட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஆஷா மெர்சி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

  இந்நிலையில் செல்வகணபதி என்ற காவல் உதவி ஆய்வாளர், விபத்து ஏற்பட்டதில் படுகாயமடைந்து ஆஷா மெர்சி வேலை பார்த்து வரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அந்த காவல் உதவி ஆய்வாளரை பார்ப்பதற்காக அவரது மகன் அபிஷேக் குமார் அடிக்கடி வந்துள்ளார்.

  இதனையடுத்து, ஆஷா மெர்சிக்கும் அபிஷேக் குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ள தொடர்பாக மாறியது. அபிஷேக் குமார் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரித்து வாழ்ந்து வருகிறார், ஆனால் இன்னும் விவாகரத்து பெறவில்லை. இந்நிலையில், ஆஷா மெர்சியும், அபிஷேக் குமாரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

  இந்நிலையில், வழக்கம் போல மருத்துவமனைக்கு பணிக்குச் சென்ற ஆஷா மெர்ஷி கடந்த 2 -ஆம் தேதி வீட்டிற்குத் திரும்பவில்லை. இதனால் பதறிப்போன கணவர், எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலில் அபிஷேக் குமாரை ஆஷா மெர்சி திருமணம் செய்து கொண்டதை கண்டுபிடித்தனர்.

  இதனையடுத்து, முதல் கணவர் குமரவேல் உயிருடன் இருக்கும் போது விவாகரத்து பெறாமல் அபிஷேக்கை மெர்சி திருமணம் செய்துள்ளார். அதேபோல அபிஷேக்கின் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

  இந்நிலையில், ஆஷா மெர்சி அபிஷேக்குடன் வசித்து வரும் நிலையில், அம்மாவை பார்க்க வேண்டும் என்று மெர்சியின் குழந்தைகள் கதறித் துடிக்கின்றனர். மற்றொரு பக்கம் மனைவியை எப்படியாவது அழைத்து வர வேண்டும் என குமரவேல் தவித்து பல முறை கெஞ்சி வருகிறார்.

  ஆனால் ஆஷா மெர்சி, எதற்கும் மனம் இறங்குவதாகத் தெரியவில்லை. ஆஷா மெர்சி கூறுகையில் “எனக்கும் குமரவேலுக்கும் அதிக வயது வித்தியாசம் உள்ளதை மறைத்து அவர் என்னைத் திருமணம் செய்துகொண்டார்.

  அதனால் இனி நான் குமரவேலுடன் வாழத் தயாராக இல்லை, அபிஷேக்குடன் தான் வாழ்வேன். ஆனால் குழந்தைகளை என்னிடம் அவர் ஒப்படைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி உரியத் தீர்வு பெறுவேன் என்று கூறுகிறார்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,229FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,110FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »