ஏப்ரல் 18, 2021, 10:30 காலை ஞாயிற்றுக்கிழமை
More

  காயத்ரி ரகுராம், குஷ்பு, கௌதமின்னு பலர் இருக்க… பாஜக., ஏன் இப்படி செய்தது?!

  பாஜக., தங்களது பிரசாரத்திற்கு எனது படத்தை பயன்படுத்தியிருப்பது வேடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் தாமரை என்றும் மலராது

  bjp ads - 1

  காயத்ரி ரகுராம், குஷ்பு, கௌதமின்னு பல பேர் இருக்க… பாஜக., ஐடி விங் ஏன் இப்படிச் செய்தது என்று கேள்விகளை எழுப்புகின்றனர் சமூகத் தளங்களில்!

  தமிழக பாஜக.,வின் டிவிட்டர் பதிவு ஒன்றில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதியின் படத்தைப் போட்டு தாமரை மலரட்டும், தமிழகம் வளரட்டும் என விளம்பர கருத்துப் பதிவு செய்திருந்தனர். இது, சமூக ஊடகங்களில் கிண்டலுக்கு உள்ளாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

  தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி கட்டப் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களிலும் பிரசாரம் கடுமையாக இருந்து வருகிறது.

  குறிப்பாக, பாஜக., வின் ஐடி பிரிவு டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் கட்சிக்கான ஆதரவுப் பதிவுகள், பிரதமர் மோடியின் சாதனைகள், பாஜக., செய்துள்ள மக்கள் நலப் பணிகள், மத்திய அரசின் நலத் திட்டங்கள் போன்றவற்றை விளம்பரப் படுத்தி வருகின்றது.

  பாஜக., ஒரு கலாசாரம் சார்ந்த, நாட்டின் பண்பாட்டைப் பாதுகாக்கும் கொள்கைப் பிடிப்புள்ள கட்சி என்று பதிய வைப்பதற்காக, கலை அம்சம் தெரியும் வகையில் ஒரு விளம்பரத்தை மேற்கொள்ள அதன் ஐடி பிரிவினர் முனைந்திருக்கின்றனர். அதன்படி, ஒரு பெண் பரதநாட்டியக் கலைஞரின் படத்தை எங்கிருந்தோ ‘சுட்டு’ பதிவிட்டு, மக்களின் மனத்தில் பதியவைக்க முயற்சி செய்துள்ளனர்.

  அப்படி ஒரு பெண் பரத நாட்டிய கலைஞரின் படத்தை வடிவமைத்து “தாமரை மலரட்டும், தமிழகம் வளரட்டும், வாக்களிப்பீர் தாமரை சின்னத்துக்கு” என குறிப்பிட்டிருந்தனர்.

  ஆனால், அந்தப் படம் தி.மு.க., ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி மேற்பார்வையில் தயாரிக்கப்பட்ட செம்மொழி கீதத்தில் இடம்பெற்றிருந்த பெண்ணின் படம். அவரோ, மோடியையும், பாஜக.,வையும் கண்மூடித் தனமாக திட்டித் தீர்க்கும் முன்னாள் நிகாயத்ரி ரகுராம், குஷ்பு, கௌதமின்னு பலர் இருக்க… பாஜக., ஏன் இப்படி செய்தது?!தி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகளும், கார்த்தி சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதியின் படம்.

  bjpads2 - 2

  இந்த விளம்பரத்துக்கான பின்னூட்டங்களில் கடும் விமரசனம் எழவே, அந்தப் பதிவை தமிழக பாஜக., நீக்கிவிட்டது. எனினும் முன்னதாக ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்திருந்த பலரும் விமர்சித்து இந்தப் படத்தைப் பரப்பி வருகின்றனர். இந்த பதிவினை பகிர்ந்துள்ள ஸ்ரீநிதி, “பாஜக., தங்களது பிரசாரத்திற்கு எனது படத்தை பயன்படுத்தியிருப்பது வேடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் தாமரை என்றும் மலராது” என கருத்திட்டுள்ளார்.

  இந்நிலையில், பாஜக.,வில் தான் அருமையான தங்கங்கள் இருக்கின்றனரே. காயத்ரி ரகுராம் ஒரு பரத நாட்டியக் கலைஞரே. அவரை வைத்து இந்த விளம்பரத்தை டிசைன் செய்திருக்கலாம். இன்னும் குஷ்பு, கௌதமி என பலர் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, யாரோ சோர்ஸ் எதுவும் கிடைக்காத தனிநபர் செய்துள்ள விளம்பரம் போல், கூகுள் தேடலில் கண்டு கொண்டு இதனை பாஜக.,வின் ஐடி., பிரிவு செய்ய வேண்டுமா என்று கேள்வி எழுப்புகின்றனர் பலரும்!

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,229FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,110FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »