ஏப்ரல் 10, 2021, 5:12 மணி சனிக்கிழமை
More

  மருத்துவ அதிசயம்! மூளைச்சாவு அடைந்த தம்பியை 1,2,3 சொல்லி எழுப்பிய அக்கா!

  Lewis1 - 1

  மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட இளைஞர் மீண்டும் உயிர்பெற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 18 வயது இளைஞர் Lewis Roberts. இவர் கடந்த 18 ஆம் தேதி ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். அந்த விபத்தில் Lewis ராபர்ட்ஸ்ன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசென்று அனுமதித்துள்ளனர்.

  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

  இதனை கேட்டு அந்த இளைஞரின் குடும்பத்தினர் கதறி அழுதுள்ளன்னர். இதையடுத்து 4 நாட்கள் Lewis மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததை அடுத்து, மருத்துவர்கள் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினரிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

  Lewis2 - 2

  இதற்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, உடல் உறுப்புகளை எடுப்பதற்க்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தயாராகியுள்ளனர். இந்நிலையில் Lewisயின் மீது அளவு கடந்த பாசம் கொண்ட அவரின் அக்கா Jade Robert என்பவர், ICUயில் இருக்கும் தனது தம்பியின் அருகில் அமர்ந்து கொண்டு அவரது கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்கப் பேசிக் கொண்டே இருந்துள்ளார்.

  இதுதான் தான் கடைசியாக தனது தம்பியிடம் பேசுவது என நினைத்துக்கொண்டு, தம்பி, நான் ஒன்று, இரண்டு, மூன்று எனச் சொல்வேன். உடனே நீ சுவாசிக்க வேண்டும் எனத் தனது மனதில் தோன்றியதைக் கூறியுள்ளார்.

  இதற்கிடையில் அறுவை சிகிச்சை செய்து உடலுறுப்புகளை எடுப்பதற்காக Lewis சை அறுவை சிகிச்சை நடைபெறும் இடத்திற்கு எடுத்துச்செல்ல மருத்துவர்கள் உள்ளே வந்துள்ளனர். தனது தம்பி தன் கண் முன்னாடியே மரணமடைய போவதை நினைத்த அவரது அக்கா, உடனே ஒன்று, இரண்டு, மூன்று எனச் சொல்லியுள்ளார்.

  Lewis - 3

  இதனை கேட்டதும் Lewis மூச்சு விட தொடங்கியுள்ளார். மேலும் அவர் கண்சிமிட்டவும் செய்துள்ளார். இதனை பார்த்ததும் மருத்துவர்கள் ஒருநிமிடம் ஆடிப்போனார்கள். மூளைச்சாவு அடைந்த அந்த இளைஞர் தற்போது தானாக சுவாசிப்பதும், கண்சிமிட்டுவதும் அவர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது.

  உடனே அறுவை சிகிச்சை வேலைகளை நிறுத்திவிட்டு அந்த இளைஞருக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுக்க தொடங்கியுள்ளனர். தற்போது அந்த இளைஞர் கால்களை அசைக்கவும், தலையை அசைக்கவும், கண்ணிமைக்கவும், வாயை அசைக்கவும் தொடங்கியுள்ளார்.

  ஏறக்குறைய இறந்துவிட்டதாக கருதப்பட்ட இளைஞர், சினிமாவில் வருவதுபோல் 1 , 2 , 3 சொன்னதும் உயிருடன் வந்தது அவரது குடும்பத்தினர் தொடங்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  two − one =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  432FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,104FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »