ஏப்ரல் 20, 2021, 3:35 மணி செவ்வாய்க்கிழமை
More

  ஊரை விட்டு ஓடுவேன் என்றவரா போராளி? அக்சராஹாசன் ட்விட்க்கு நெட்டிசன்ஸ்!

  kamal - 1

  எனது அப்பா ஒரு போராளி என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனை அவரது மகள் அக்சராஹாசன் புகழ்ந்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

  ஆனால், தேர்தல் பிரசாரத்தின்போது, மைக் சிறிது நேரம் வேலை செய்யாததற்கே, தனது கட்சி சின்னமான டார்ச் லைட்டை தூக்கி வீசி உடைத்த கோபக்காரரான கமல்ஹாசன் எப்படி போராளியாக இருக்க முடியும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

  தமிழக சட்டமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் . அவருடன் உதவிக்கு அவரது இளையமகள் அக்சராஹாசனும் சென்று வருகிறார். அக்சராஹாசன் பதிவிட்டுள்ள டிவிட் மூலம் தெரிய வந்துள்ளது.

  akshara - 2

  அவரது டிவிட்டில் ‘எனது அப்பா ஒரு போராளி என்றும் போராட்டத்தின் முடிவு வரை ஏற்படக்கூடிய வலிகளை தாங்கிக் கொள்வார்; என்றும் கூறி அதனுடன் கமல்ஹாசனுடன் இருக்கும் இரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை அவரது கட்சியினர் வைரலாக்கி வருகின்றனர்.

  ஆனால், கமல்ஹாசனின் அரசியல் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. தேர்தல் பிரசாரத்தின்போது, சினிமா வசனம் போல பேசி வருபவர் நிஜவாழ்க்கையில் ஒரு போராளிக்கு உரிய தகுதியோ, ஒரு தலைவனுக்கான தகுதியோ இல்லாதவராகவே இருக்கிறார்.

  கமல்ஹாசன் சினிமாவில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், வேறுவழியின்றி, அரசியலுக்கு வந்து, மக்களுக்கு நல்லது செய்யப் போவதாக கூறி வருகிறார். அவருக்கு ஆதரவாக மற்றொரு நடிகர் சரத்குமாரும், ஊடக அதிபர் பாரிவேந்தரும் கூட்டணி அமைத்துக்கொண்டு, ஆட்சியை கைப்பற்றிவிடப் போவதுபோல் அலப்பறை செய்து வருகின்றனர்.

  தேர்தல் பிரசாரத்திற்காக காரில் பயணம் செய்யவே கஷ்டப்பபட்டுக்கொண்டு, கோடிக்கணக்கில் பணம் செலவழித்து, தனி ஹெலிகாப்டர் மூலம் சொகுசாக சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் கமல்ஹாசன் , அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்காக எப்படி பணியாற்றுவார் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றன.

  சமீபத்தில், கோவையில், பிரசாரத்தின்போது, மைக் வேலை செய்யவில்லை என்றதும், தனது கையில் இருந்த டார்ச் லைட் சின்னத்தை தூக்கி வீசி தனது கோபத்தை பொதுமக்கள் மத்தியில் வெளிப்படுத்தியதுடன், அங்கிருந்து பேசாமல் சென்ற ஒரு நபர், எப்படி ஒரு போராளியாக இருக்க முடியும், அவர் எதற்காக போராடினார்,

  தமிழர்களின் உரிமைக்காக என்று குரல் கொடுத்தார், தனது படம் வெளியிட முடியவில்லை என்று, ஊரைவிட்டு ஓடப்போவதாக ஒப்பாரி வைத்தவர்தானே கமல்ஹாசன், அவரை போராளி என்று அவரது மகள் அக்சராஹாசன் எப்படி கூறமுடியும் என சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,116FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »