Home அடடே... அப்படியா? இதை பயிரிட்டால் 2 வருடத்தில் பத்து மடங்கு லாபம்! சக விவாசாயிகளை ஊக்குவிக்கும் இளைஞர்!

இதை பயிரிட்டால் 2 வருடத்தில் பத்து மடங்கு லாபம்! சக விவாசாயிகளை ஊக்குவிக்கும் இளைஞர்!

அம்ரேஷ் சிங் என்ற பீகார் விவசாயி உலகின் விலை உயர்ந்த பயிர் ‘ஹாப் தளிர்கள்’ ‘hop shoots’ பயிரிடுகிறார். தனது பண்ணையில் வளர்க்கப்படும் காய்கறிகளில் ஒன்றை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்று வருகிறார்.

ஹாப்ஸ் அல்லது ஹாப் ஷுட்ஸ் அடிப்படையில் ஹூமுலஸ் லுபுலஸின் பூக்கள் (விதை கூம்புகள் அல்லது ஸ்ட்ரோபில்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன) பூக்கும் தாவரங்களின் கன்னாபேசே குடும்பத்தில் உறுப்பினர்களாக உள்ளன.

செரிமானப் பிரச்னையை சரி செய்வதில் ஆரம்பித்து புற்றுநோய் செல்களைக் கொல்வதற்கான சிகிச்சையில் பயன்படுவது வரை இந்த காயின் சிறப்பம்சங்கள் ஏராளம் என்கிறது இணையம்.

10 மீ உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையைச் சேர்ந்தவை ஹாப் ஷுட்ஸ். மேலும் 20 வருடங்கள் வரை வாழக்கூடியது. ஹாப் தாவரத்தின் பூ, காய், பழம், தண்டு என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவையாக இருப்பதால், ஒரு கிலோ 85,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

11ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட இந்தத் செடி, உலகின் பல்வேறு நாடுகளில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக இந்தத் தாவரத்தைப் பயிரிட்டவர் பீகாரைச் சேர்ந்த அமரேஷ் சிங் மட்டுமே.

இவர் தான் உலகின் விலை உயர்ந்த பயிரான ‘ஹாப் தளிர்கள்’ பயிரிட்டு வெற்றிபெற்றுள்ளார். அம்ரேஷ் இந்தப் பயிருக்கான செடிகளை வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து வாங்கி இருக்கிறார்.

”6 ஆண்டுகளுக்கு முன்பே இதன் விலை ஒரு லட்சமாக இருந்தது. அரிதான வகை தாவரம் என்பதால், ஸ்பெஷல் ஆர்டரின் பேரில்தான் விற்பனை செய்ய முடிகிறது. மற்றப் பயிர்களை போல அல்லாமல், இதை பயிரிட்டால் பத்து மடங்கு அதிகமான லாபத்தை இரண்டே வருடங்களில் விவசாயிகள் பெறலாம்,” என்று அம்ரேஷ் கூறியிருக்கிறார்.

அம்ரேஷ் வெற்றிகரமாக விளைச்சல் எடுத்ததை அடுத்து விவசாயிகள் நிதி ரீதியாக வளர உதவும் என்பதால் ஹாப்ஸ் சாகுபடி இந்தியாவில் ஊக்குவிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version