More

    To Read it in other Indian languages…

    மதுரை தல்லாகுளம் பகுதியில் வாக்காளருக்கு பண விநியோகம் செய்தபோது… பறிமுதல்!

    crime imgae

    மதுரை தல்லாகுளம் பகுதியில் வாக்காளருக்கு பணம் விநியோகம் செய்தபோது பறிமுதல்!

    மதுரை ஏப்ரல்3 தல்லாகுளம் பகுதியில் வாக்காளருக்கு பணம் விநியோகம் செய்தவரிடம்இருந்து போலீசார் பணம் பறிமுதல் செய்தனர்.

    தல்லாகுளம் விசாலாட்சிபுரம் காலாங்கரை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரி மைதீன் பாட்சா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்‌

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் 62 என்பவரிடமிருந்து வாக்காளர் பட்டியலும் பணம் ரூபாய் 20 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    குடும்ப பிரச்னை காரணமாக கணவர் தூக்குப் போட்டு தற்கொலை!போலீஸ் விசாரணை!

    மதுரை: குடும்ப பிரச்சனை காரணமாக மனமுடைந்த கணவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .

    மதுரைசொக்கிகுளம் அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில் வேல் 40. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த செந்தில்வேல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் தொடர்பாக மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில்தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    மதுரை கே.புதூரில் நூதன மோசடி நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க நகை அபேஸ்! மர்ம நபர்கள் கைவரிசை!

    மதுரை: கே.புதூர்பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையை நூதனமாக ஏமாற்றிபறத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    கே.புதூர்கற்பகநகர்நான்காவதுதெருவை சேர்ந்தவர் கண்ணன் 46.இவரதுதாய் கற்பகநகர் ஆறாவது தெரு சந்திப்பில் நடந்து சென்றபோது 3 மர்ம நபர்கள் அவருக்கு நன்மை செய்வது போல் நடித்தனர். அவர் அணிந்து இருந்த 7 பவுன் நகையை வாங்கி பேப்பரில் மடித்து பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தனர்.

    பின்னர் அந்தப் பெண் வீட்டிற்குசென்று பார்த்த போது தங்க நகைக்கு பதிலாக கற்கள் வைக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் அந்த பெண் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக கண்ணன் கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஏமாற்றிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


    மதுரையில் பத்திர எழுத்தர் அலுவலகத்தை உடைத்து 3 லட்சம் கொள்ளை

    மதுரை: மதுரை தல்லாகுளம் பகுதியில் பத்திர எழுத்தர் அலுவலகத்தை உடைத்து 3 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர் .

    மீனாம்பாள்புரம் 9வது தெரு ஆபீஸர் டவுன் மேற்குப் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் 37 .இவர் தல்லாகுளம் சிங்கராயர் காலனி வடக்கு பகுதியில் பத்திரம் எழுதும் அலுவலகம் வைத்துள்ளார்.

    இவர் வழக்கம்போல அலுவலகம்முடிந்து மூடி சென்றுவிட்டு மறுநாள் வந்து பார்த்தார்.அப்போது அதன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே அலுவலகத்தில் வைத்திருந்த ரூபாய் 3 லட்சத்து 60 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிவகுமார் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


    வாகனச் சோதனையில் பணம் பறிமுதல்

    அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி ராமலிங்க நகர் ஆர்ச் அருகே பறக்கும் படை அதிகாரியும், மண்டல துணை தாசில்தாருமான நாகேஷ் தலைமையில் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணமின்றி ரூ.85 லட்சம் இருந்தது. இந்த பணத்தை பறிமுதல் செய்து அருப்புக்கோட்டை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    4 × four =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,645FollowersFollow
    17,300SubscribersSubscribe
    -Advertisement-
    Exit mobile version