Home அடடே... அப்படியா? சொந்த கிராமத்தில் வாக்களித்த கே.அண்ணாமலை!

சொந்த கிராமத்தில் வாக்களித்த கே.அண்ணாமலை!

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது சொந்த கிராமமான ஊத்துப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தலில், இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 161 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.

ஆண் வாக்காளர்கள்: 4,33,016, பெண் வாக்காளர்கள்: 4,66,110, மூன்றாம் பாலினத்தவர் 80 என மொத்தம் 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் 8,99,236 வாக்காளர்கள் உள்ளனர்.

சட்டமன்ற தொகுதிகளிலும் 623 இடங்களில் மையங்கள்1274, இதில் பதற்றமானவை 123 என கண்டறியப்பட்டுள்ளது.

வாக்கு மையங்களில் சிசிடிவி கேமரா 837, மண்டல அலுவலர்கள் 121, தேர்தல் பார்வையாளர்கள் 64, வாக்குப்பதிவு அலுவலர்கள் எண்ணிக்கை 6112 பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது சொந்த கிராமமான ஊத்துப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

கரூர் சட்டப்பேரவை தொகுதி மண்மங்கலம் புதுப்பாளையம் வாக்குச்சாவடி எண் 22 ல் திமுக வேட்பாளர் வி செந்தில் பாலாஜி குடும்பத்துடன் வாக்களித்தார்.

பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசுகையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. யார் ஆட்சியில் அமரவேண்டும் நாட்டை ஆள வேண்டும் என மக்கள் தீர்மானித்து விட்டனர். கரூர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும். கரூர் மாவட்டத்தில் மற்ற நான்கு தொகுதிகளிலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்று திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் ஆட்சியில் அமர்வது உறுதி என்றார்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மொஞ்சனூர் இளங்கோ போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இன்று சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. கா.பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட தொட்டியம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். அங்கு கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தனது வாக்கை செலுத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version